யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பிர்லா பவனில் நடைபெற இருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி சென்ற பொழுது பெரட்டா என்ற இத்தாலிய ரக சிறிய கைத்துப்பாகி மூலம் நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட...
பரவிய செய்தி
மகாத்மா காந்தி கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். 

விரிவான விளக்கம்
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பிர்லா பவனில் நடைபெற இருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி சென்ற பொழுது பெரட்டா என்ற இத்தாலிய ரக சிறிய கைத்துப்பாகி மூலம் நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டார்.
நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட இறுதி மற்றும் அரிய புகைப்படங்கள் என சில படங்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. அத்தகைய புகைப்படங்கள் காந்தியின் நினைவு நாள், பிறந்தநாளின் பொழுது மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.
அதில் ஒன்றாக, மக்கள் கூட்டமாக அமர்ந்து இருக்கும் பொழுது காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை இருவர் பிடித்து செல்லும் புகைப்படமானது வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி படுகொலை செய்த பொழுது கண்ணால் பார்த்த சாட்சிகள் மட்டுமே இருந்தன. கொலை நடக்கும் பொழுது புகைப்படங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. காந்தியை கோட்சே சுட்டுக் கொல்வது போன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளே.

Youtube link | archived link
1963-ம் ஆண்டில் மார்க் ராப்சன் என்பவரால் எடுக்கப்பட்ட " Nine hours to Rama " என்ற திரைப்படத்தில் காந்தி கொலை செய்யப்படும் நேரமான 1.55.32-ல் எடுக்கப்பட்ட படங்களை இந்திய அளவில் நீண்டகாலமாக பரப்பி வருகின்றனர்.

News link | archived link
2019-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மாலைமலர் இணையதளத்தில் மகாத்மா காந்தியை கோட்சே சுலபமாக சுட்டுக்கொன்றது எப்படி ?- உதவியாளர் தகவல் என்ற தலைப்பில் வெளியான செய்தியில் " Nine hours to Rama " திரைப்படத்தில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படத்தை கோப்பு காட்சி எனக் குறிப்பிடாமல் வெளியிட்டு இருந்துள்ளனர்.
மேலும் படிக்க : காந்திச் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட அரியப் படமா ?
இதற்கு முன்பாக, மகாத்மா காந்தியை நோக்கி கோட்சே துப்பாக்கியுடன் இருக்கும் வைரல் புகைப்படமும் இத்திரைப்படத்தைச் சேர்ந்தவையே.