YouTurn

ஈரானில் உள்ள தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பரவும் கேமிங் வீடியோ!

ஈரானில் உள்ள தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக பரவும் கேமிங் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வருவது Arma 3 கேமிங் வீடியோவாகும். இதற்கும் இஸ்ரேல் - ஈரான் போருக்கும் எந்த தொடர்புமில்லை.

பரவிய செய்தி

Amazing aerial maneuvers by Israeli fighter pilots over Tehran in  Iran and what an effective use of Chaffs (dispensing innumerable thin metalic sheets to confuse Radars and metal seeking missiles) & Flares (heat balls to confuse heat seeking missiles). 

image.png

X Link | Archived Link 

விரிவான விளக்கம்

ஈரானில் உள்ள தெஹ்ரான் மீது இஸ்ரேலிய போர் விமானிகள் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், Chaffs மற்றும் Flares பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் 1 நிமிடம் 17 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வானில் பறக்கும் ஒரு போர் விமானத்தை, கீழே இருந்த பீரங்கி மூலம் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது BATTLE DRAGONS என்ற யூடியூப் பக்கத்தில்,  Russian 5th Generation Fighter Su-57-Military Simulation ArmA 3 என்ற தலைப்பில் டிசம்பர் 30, 2024 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


மேலும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்த போது, Military Simulation Specialty Channel! ArmA3 MilSim Play என்று description-ல் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. எனவே இது கேமிங் என்பது உறுதியானது. 

image.png


இதே போல் பல்வேறு வீடியோக்கள் அந்த யூடியூப் பக்கத்தில் பதிவாகியிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


இதற்கு முன்பும் இதே போன்று கேமிங் வீடியோக்கள் இரு நாட்டின் போர் சூழல்களின் போது சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : https://youturn.in/factcheck/gaming-videos-are-falsely-spread-as-a-rafale-jet-struck-a-pak-terrorist-camp.html 


https://youturn.in/factcheck/photos-and-videos-falsely-claimed-to-be-in-link-with-ind-pak-confront.html 


முடிவு : 

நம் தேடலில், ‘Battle Dragon’ என்ற யூடியூப் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட Gaming Video-வை  ஈரானில் உள்ள தெஹ்ரான் மீது இஸ்ரேலிய போர் விமானிகளின் வான்வழி தாக்குதல் என்று தவறாக பரப்பப்படுவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க