YouTurn

எரிபொருள் விலை உயர்வு என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அண்ணாமலை கூறியதாக வதந்தி !

எரிபொருள் விலை உயர்வு என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என அண்ணாமலை கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை பேச்சு



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல் விலையைப் போன்றே டீசல் விலையும் 100ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சமையல் எரிவாயு விலையும் மாதந்தோறும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால், ஆளும் பாஜக அரசிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சையாக பேசியதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அக்டோபர் 24-ம் தேதி அவ்வாறான செய்தி ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, " பாஜக மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் " எனப் பேசிய செய்தியே வெளியாகி இருக்கிறது.



Facebook link  

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. மேற்காணும் செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தையே வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், "இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியான செய்தி " எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க : கேஸ் பதிலாக விறகடுப்பை பயன்படுத்துங்கள் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

இதற்கு முன்பாகவும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுடன் பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்புப்படுத்தி போலிச் செய்திகள் பரப்பப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை பேச்சு என்று வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க