யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
*பிரான்ஸ் நாட்டில் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களை இழிவு படுத்திய ஆசிரியர், சாமுவேல் அவர்களை கொலை செய்த செசன்யா நாட்டு இளைஞர் அங்குள்ள காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் !*அவரின் ஜனாசா செசன்யா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது !*விடைபெற்றார், ஷஹீதான அந்த இளைஞர் ! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
பிரான்ஸ் நாட்டில் முகமது நபியை இழிவுப்படுத்திய ஆசிரியர் சாமுவேலை கொலை செய்த செச்செனியா நாட்டு இளைஞரை அங்குள்ள காவல்துறை சுட்டுக் கொன்றது. அவரின் உடலை செச்செனியா நாட்டிற்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்ததாக 1.03 நிமிடம் கொண்ட வீடியோ தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி குறித்த கேலிச் சித்திரம் ஒன்றை காட்டியதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சாமுவேல் படீ என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை படுகொலை செய்தது ரஷ்ய நாட்டின் செச்செனியா எனும் பகுதியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு அகதியாக வந்து வாழ்ந்து வந்த அப்துல்லா அயூயெடோவிச் அன்சோரோவ் ஆவார். அப்துல்லாக் என்ற இளைஞரையும் பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அப்துல்லாக் உடலை செச்செனியா பகுதிக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஆகையால், வைரலாகும் வீடியோவை Invid & We verify மூலம் தனித்தனி புகைப்படங்களா எடுத்து ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடுகையில், 2018-ம் ஆண்டு 06-ம் தேதி Caucasian Knot எனும் இணையதளத்தில் வெளியான செய்தியில் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

" ரஷ்ய ராணுவ அதிகாரி யூரி புடனோவ் என்பவரை கொலை செய்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யூசுப் டெமிர்கானோவுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கில் செச்செனியாவின் தலைவர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் " எனச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
" Yusup Temirkhanov " எனும் கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில் 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி முஸ்லீம் போர்ட் எனும் யூடியூப் சேனலில் தற்போது வைரலாகும் வீடியோ உடன் ஒத்த காட்சிகளை கொண்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் மசூதியும், தற்போது வைரலாகும் வீடியோவில் இருக்கும் மசூதியும் ஒன்றாக இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பிரான்ஸ் நாட்டில் பள்ளி ஆசிரியரை கொலை செய்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்துல்லா உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த காட்சி என பரவும் வீடியோ தவறானது என்பதையும், அந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பே செச்செனியாவில் நிகழ்ந்த யூசுப் டெமிர்கானோ என்பவரின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.