YouTurn

ஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா ?

ஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்த்த காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கில் மரங்கள் எரிந்து நாசமாகின, கோடிக்கணக்கான பறவைகள், ஆயிரக்கணக்கான விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதில், கோலா கரடிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், காட்டுத் தீயில் குட்டிகளை இழந்த பெண் நரி ஒன்று தாயை இழந்த கோலா...

பரவிய செய்தி

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பெண் நரி பால் கொடுக்கும் வைரல் வீடியோ.



News link | archived link 



Youtube link | archived link 

விரிவான விளக்கம்

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்த்த காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கில் மரங்கள் எரிந்து நாசமாகின, கோடிக்கணக்கான பறவைகள், ஆயிரக்கணக்கான விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதில், கோலா கரடிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.



இந்நிலையில், காட்டுத் தீயில் குட்டிகளை இழந்த பெண் நரி ஒன்று தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சியென வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக பாலிமர் சேனலில் வீடியோ செய்தி மற்றும் இணையதள செய்தி வெளியாகியது. பாலிமர் சேனலில் வெளியான நரி பாலூட்டும் வீடியோ செய்தி முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. zee hindustan தமிழ் செய்தியிலும் நரி பாலூட்டுவது தொடர்பாக வெளியாகி இருக்கிறது.



News link | archived link 

உண்மை என்ன ? 

தாயை இழந்த, பிற இனத்தைச் சேர்ந்த குட்டிகளுக்கு பெண் நரி பாலூட்டுவதாக கூறுவது அனைவரின் மத்தியில் அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சில விலங்குகள் பிற இனத்தைச் சேர்ந்த குட்டிகளை தன் குட்டி போன்று வளர்த்து வந்த சம்பவங்கள் உலக அளவில் ஏராளம். உதாரணமாக, நாய் குட்டிகளுக்கு பாலூட்டிய பசு, நாய் குட்டியை தன் குட்டி போல் வளர்த்து வரும் குரங்கு உள்ளிட்டவை. ஆனால், இந்த வைரல் வீடியோவில் இருப்பது கோலா குட்டிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.



Youtube link | archived link 

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் பெண் நரி கோலா குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சி என வைரலாகும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2016-ம் ஆண்டில் Balkan Music என்ற யூடியூப் சேனலில் " Mother Fox feeding her babies " என்ற தலைப்பில் தற்போது வைரலாகும் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது. பெண் நரி தன்னுடைய குட்டிகளுக்கு பாலூட்டுகிறது.



இதேபோல், 2014-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி Luc Durocher என்ற சேனலில் பதிவான வீடியோவில், பெண் நரி தன் குட்டிகளுக்கு பாலூட்டும் காட்சி மற்றொரு கோணத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அதில், நரியிடம் பால் குடிப்பது நரியின் குட்டிகளே என தெளிவாய் தெரிகிறது. எனினும், இந்த காட்சியை பதிவு செய்தது யார், எங்கு மற்றும் எப்பொழுது எடுக்கப்பட்டு வெளியாகியது என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை.



Youtube link | archived link  



முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு, குட்டிகளை இழந்த தாய் நரி பாலூட்டுவதாக பாலிமர் செய்தியில் வெளியான வீடியோ தவறான தகவலாகும். அந்த வீடியோவில் இருப்பது கோலா குட்டிகள் அல்ல, நரியின் குட்டிகளே மற்றும் அந்த பகுதி ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட இடமும் அல்ல.

தாய் நாரி தன்னுடைய குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோ காட்சி 6 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வெளியாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாக தவறான வீடியோவை உண்மை என நினைத்து பாலிமர் செய்தி சேனலில் வெளியிட்டு உள்ளனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…