YouTurn

“மெஹந்தி இட வேண்டாம், மெஹந்தி இடப்பட்ட ஹஜ் பயணிகள் 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்” எனக் கூறி பரவி வரும் செய்திகள் வதந்தியே!

“மெஹந்தி இட வேண்டாம், மெஹந்தி இடப்பட்ட ஹஜ் பயணிகள் 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்” எனக் கூறி பரவி வரும் செய்திகள் வதந்தியே!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இது தொடர்பாக எந்வொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இது தொடர்பாக ஹஜ் கமிட்டியை (Hajj Committee of India) தொடர்பு கொண்டு பேசியதிலும், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர்.

பரவிய செய்தி

மெஹந்தி இட வேண்டாம் - ஹஜ் பயணிகள் - 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்…

image.png

விரிவான விளக்கம்

2026-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும் ஓர் அறிவிப்பு என்று வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மெஹந்தி இட வேண்டாம், மெஹந்தி இடப்பட்ட ஹஜ் பயணிகள் 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

முதலில் இது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்று சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இணையதளப்பக்கத்தில் தேடிப் பார்த்தோம். ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

image.png


ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் சமூக வலைதளப்பக்கங்களிலும் இது தொடர்பாக தேடிப் பார்த்தோம். அதிலும் மெஹந்தி குறித்தான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதிலிருந்து பரவி வரும் செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. 


இதை மேலும் உறுதிச் செய்ய, Youturn தரப்பில் இருந்து ஹஜ் கமிட்டியை (Hajj Committee of India) தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர்.


முடிவு: 

எனவே, “மெஹந்தி இட வேண்டாம், மெஹந்தி இடப்பட்ட ஹஜ் பயணிகள் 4 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்” எனக் கூறி பரவி வரும் செய்தி தவறானவை. சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இது தொடர்பாக எந்வொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க