YouTurn

கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?

கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar thalaivi 1

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட தலைவி திரைப்படம் கங்கனா ரணாவத் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கி இருந்தார். தலைவி திரைப்படம் வெளியாகி அதிமுக தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைவி திரைப்படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் " எனக் கூறியதாக ஆனந்த விகடன் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைவி திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், படத்தின் நிறை குறைகளோடு, நீக்கப்பட வேண்டிய காட்சிகள் குறித்தும் பேசி இருக்கிறார்.



வைரல் செய்யப்படும் அனந்த விகடன் நியூஸ் கார்டை தேடுகையில், " தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! " என்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.



Facebook link 

ஆனந்த் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டில் வேண்டுமென்றே, " தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் " என எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரப்பப்படும் ஆனந்த் விகடன் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க