YouTurn

ஃபோர்டு கார் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்த திமுக அரசு காரணமா ?.. அப்போ குஜராத்தில் ?

ஃபோர்டு கார் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்த திமுக அரசு காரணமா ?.. அப்போ குஜராத்தில் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இந்த விடியல் ஆட்சியில் இது போன்ற இன்னும் எத்தனை தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த போரார்களா தெரியவில்லை...



Archive link 

விரிவான விளக்கம்

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரை உற்பத்தி செய்து முடித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31-ம் தேதி மூடப்படுகிறது என செய்தி ஊடகங்களில் வெளியாகியது.

இந்த செய்தி பரவத் தொடங்கிய பிறகு, திமுக ஆட்சியில் இன்னும் இதுபோன்று எத்தனை தொழிற்சாலைகள் மூடப் போகிறதோ என தமிழக பாஜகவின் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அப்பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.





உண்மை என்ன ?

பாஜகவினர் கூற்றுப்படி பார்த்தால், ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலை நகரில் உள்ள ஆலையில் மட்டும் உற்பத்தியை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம்  குஜராத்தில் உள்ள மற்றொரு ஆலையிலும் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. கடந்த ஆண்டே ஃபோர்டு இந்தியா நிறுவனம், சென்னை மற்றும் சனந்த் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்தது.



Twitter link

2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஃபோர்டு இந்தியா வெளியிட்ட அறிவிப்பில், " ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளை மறுகட்டமைப்பு செய்கிறது : சென்னை மற்றும் சனந்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது. 2021ன் நான்காம் காலாண்டில், ஏற்றுமதி செய்ய சனந்தில் நடைபெறும் கார் உற்பத்தி நிறுத்தப்படும் மற்றும் 2022-ன் இரண்டாம் காலாண்டில் சென்னையில் உள்ள வாகன இன்ஜின்/அசெம்பிளி ஆலையானது நிறுத்தப்படும். ஏற்றுமதிக்காக இன்ஜின் உற்பத்தி தொடரும் " எனத் தெரிவித்து இருந்தது.



விற்பனை குறைவு மற்றும் கொரோனா காலம் என தொடர் பாதிப்பில் சிக்கி இருந்த ஃபோர்டு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள இரு தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. எனினும், வாடிக்கையாளர்களுக்காக ஃபோர்டு கார்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து, 2022 மே மாதம் ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் சனந்த் ஆலையை டாடா மோட்டார் நிறுவனம் வாங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

முடிவு :

நம் தேடலில், சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மட்டும் மூடப்படவில்லை, குஜராத்தில் உள்ள மற்றொரு ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசின் காரணமாக தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டு உள்ளதாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க