யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பெரும்பாலான பொருட்களில் கலப்படப் பொருட்கள் கலந்து இருப்பார்களா என்ற ஐயத்தின் காரணமாக தரம் அறிந்து ஒவ்வொரு பொருளையும் தீவிர யோசனைக்கு பிறகே வாங்குவதுண்டு. ஆனால், உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதை சாதாரண வாடிக்கையாளர்களான மக்கள் அறிந்து கொள்வது சிரமமே !. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது...
பரவிய செய்தி
2018-19-ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை. இதில், முதல் 2 இடங்களை உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகம் பிடித்துள்ளது.

விரிவான விளக்கம்
பெரும்பாலான பொருட்களில் கலப்படப் பொருட்கள் கலந்து இருப்பார்களா என்ற ஐயத்தின் காரணமாக தரம் அறிந்து ஒவ்வொரு பொருளையும் தீவிர யோசனைக்கு பிறகே வாங்குவதுண்டு. ஆனால், உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதை சாதாரண வாடிக்கையாளர்களான மக்கள் அறிந்து கொள்வது சிரமமே !. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது நீண்டகாலமாக நிகழ்வதே.
ஒவ்வொரு ஆண்டும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையத்தின் விதிமுறைகளின்படி சோதனைகள் மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில், 2018-19-ம் ஆண்டுகளில் இந்திய அளவில் உணவு மாதிரிகளில் நடத்திய சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில், முன்னணியில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதிக்கும் நிகரான உணவு மாதிரிகள் சோதனையில் தோல்வி அடைந்து, உணவுகளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இந்திய யூனியனின் உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மக்களவையில் கூறுகையில், 2016-17 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கலப்பட உணவுத் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்ட 8,100 பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் குற்றம் செய்தவர்களிடம் இருந்து ரூ.43.65 கோடியை அபராதமாக பெற்று இருக்கின்றனர். இந்த தகவல் மாநில அரசு அளித்த தகவலின் அடிப்படையில் எனக் குறிப்பிட்டார். இந்த ஆய்வுகள் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உடைய உணவு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன " எனக் கூறியுள்ளார்.

அரசின் தகவலின்படி, 2018-19 ஆண்டில் சோதனை செய்யப்பட்ட 65,000 உணவு மாதிரிகளில் 20,000 மாதிரிகள் கலப்பட உணவு என உறுதி செய்யப்பட்டன. 2017-18-ல் 99,000 உணவு மாதிரிகளில் 24,000 உணவு மாதிரிகள் விதிமுறைகளின் படி இல்லை என உறுதி செய்யப்பட்டது. 2016-17-ல் 78,000 உணவு மாதிரிகளில் 18,000-க்கும் மேற்பட்ட மாதிரிகள் கலப்பட உணவுகள் என நிரூபிக்கப்பட்டன.
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிப்பதை அரசாங்கம் மேற்கொண்டு வந்தாலும் கலப்பட உணவுகளின் எண்ணிக்கை ஆண்டாண்டுக்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
" இதனை மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கான அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும் "