YouTurn

பனை மரம் பறக்கிறதா ?

பனை மரம் பறக்கிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பனை மரமானது சிறிது உயரத்தில் மேலே பறப்பது போன்ற வீடியோ பதிவுகள் வளைகுடா நாடுகளில் அதிகம் வைரலாகியவை. சமீபத்தில் அதே வீடியோ இங்கும் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. அதைப் பற்றிய கேள்விகளும் எழுகிறது. “ Flying palm tree “ என கூகுளில் டைப் செய்தால் பனை மரம் பறக்கும் வீடியோவையும், படங்களையும் காண...

பரவிய செய்தி

பனை மரம் ஆகாயத்தில் பறக்கிறது.

விரிவான விளக்கம்

பனை மரமானது சிறிது உயரத்தில் மேலே பறப்பது போன்ற வீடியோ பதிவுகள் வளைகுடா நாடுகளில் அதிகம் வைரலாகியவை. சமீபத்தில் அதே வீடியோ இங்கும் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. அதைப் பற்றிய கேள்விகளும் எழுகிறது.



Flying palm tree “ என கூகுளில் டைப் செய்தால் பனை மரம் பறக்கும் வீடியோவையும், படங்களையும் காண முடிகிறது. அதில், ஆங்கிலத்திலும், அரபி மொழியிலும் குறிப்பிட்டு இந்த வீடியோ அதிகம் இருக்கும்.

எனினும், பனை மரம் தொடர்பான வீடியோவின் முதல் பதிவு எந்த நாட்டில், யார் பதிவிட்டது என்ற விவரங்கள் சரியாக தெரியவில்லை. ஆகையால், பனை மரம் பறந்த சம்பவம் ஓமன், ஈராக், அல்ஜீரியா, தென் ஆப்ரிக்கா என பல நாடுகளைக் குறிப்பிட்டு அங்கு நடந்ததாகக் கூறி வருகின்றனர்.



எங்கு நடந்தால் என்ன ? பனை மரம் எவ்வாறு பறக்கும் என்ற கேள்வி தானே முக்கியம் !. அதற்கான விடையைக் கொடுப்போம்.



பனை மரமானது பறப்பதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. வீடியோவில் மரத்திற்கு மேல் பகுதியை முழுவதுமாக காண்பிக்கவே இல்லை.



பனை மரம் பறக்கும் வீடியோவின் முதல் சில நொடிகளை உற்றுப் பார்த்தாலே உங்களுக்கு எவ்வாறு இது சாத்தியம் என புரிந்து இருக்கும். கருப்பு நிறத்தில் கயிற்றினைக் கட்டி மேலே தூக்கி வைத்து இருப்பதன் மூலம் மரம் உயரத்தில் பறப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.



பனை மரத்தை ஒரு பகுதியில் இருந்து அகற்ற மேல் பகுதியில் கயிற்றைக் கற்றி தூக்கிச் செல்லும் பிற புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் பார்க்கலாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.