யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விமானத்தில் பயணம் செய்யும் முதியவர் ஒருவர் பணிப்பெண்ணிடம் டீ கேட்டதாகவும் அதற்கு அவர் தவறுதலாகக் காபி கொடுத்ததினால் கோபம் கொண்ட முதியவர் கடுமையாகச் சத்தம் போட்டுத் திட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இதே வீடியோ ’Fly High Institute’ என்ற யூடியூப் பக்கத்திலும் கடந்த ஜனவரி 15ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இதே போன்று பல வீடியோக்கள் அப்பக்கத்தில் உள்ளது. மேலும் பரவக் கூடிய வீடியோவில் உள்ள முதியவரும் பல வீடியோக்களில் உள்ளார்.
அந்த யூடியூப் பக்கத்திலேயே ‘Fly High Institute‘ என்னும் தளத்தின் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தளத்தை ஆய்வு செய்ததில் அது விமானத்தில் பணி புரிபவர்களுக்கான பயிற்சி மையம் என்பதை அறிய முடிந்தது. இந்த பயிற்சி நிலையம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது என அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் பல்வேறுபட்ட மனிதர்களையும் வேறுபட்ட சூழல்களைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழலை எப்படி கையாள வேண்டும். எப்படி பயணிகளிடம் பேச வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கும் போது எடுக்கப்பட்டதுதான் அந்த வீடியோக்கள். அத்தகைய பயிற்சி வீடியோக்களில் ஒன்றுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் உண்மை சம்பவம் போல் பரப்பப்படுகிறது.
முடிவு :
விமானத்தில் பயணம் செய்யும் முதியவர் ஒருவருக்கு டீ-க்கு பதில் காபி கொடுத்ததால் அவர் சண்டையிட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது விமானப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.