
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
😯😳😱😭😭😭
*ரயில்வே நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம் ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது* pic.twitter.com/J3qoJzI1oL
— .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics (@balup13248255) December 13, 2022
*இரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம். ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம்*👇 pic.twitter.com/jSZht3FL3s
— myck (@smbsultan) December 12, 2022
உண்மை என்ன ?
வைரல் வீடியோ குறித்து தேடுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் கரக்பூர் இரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் மீது மின்சாரம் தாக்கியதாக டிசம்பர் 13ம் தேதி இந்தியா டுடே உள்ளிட்ட முன்னணி செய்தி சேனல்களில் வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் 9ம் தேதி டைம்ஸ் நவ் செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில், " கரக்பூர் இரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்கம்பி விழுந்ததாக " குறிப்பிடப்பட்டு உள்ளது.
A freak accident - a long piece of loose cable, taken by a bird somehow came in contact with the OHE wire and the other end came down and touched a TTE's head. He suffered burn injuries but is out of danger and under treatment - at Kharagpur station yesterday afternoon! #Accident pic.twitter.com/ObEbzd1cOF
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) December 8, 2022
Twitter link| Archive link
டிசம்பர் 8ம் தேதி இரயில்வே அதிகாரி ஆனந்த் ரூபனகுடி என்பவரின் ட்விட்டர் பதிவில், " இது ஒரு வினோதமான விபத்து. ஒரு நீளமான தளர்ந்த கேபிள் ஆனது எப்படியோ பறவை ஒன்றால் OHE வயருடன் தொடர்பு ஏற்பட்டு, மறுமுனை கீழே வந்து டிக்கெட் பரிசோதகர் தலையில் விழுந்துள்ளது. அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் ஆபத்தில்லை, அவர் சிகிச்சையில் உள்ளார் " எனக் கூறி இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், இரயில் நிலைய நடைமேடையில் செல்போன் மூலம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் வீடியோவில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்சார கம்பி விழுந்து பாதிக்கப்பட்டு இருக்கிறார், செல்போன் மூலம் மின்சாரம் பாயவில்லை என்பதை அறிய முடிகிறது.