யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நெருப்பு எரிய ஆக்ஸிஜன் தேவை.. முகக்கவசத்தால் உங்களுடைய நுரையீரலை கெடுத்துக்காதீர்கள்.. இந்த நெருப்பு தான் உங்கள் உயிர் !
Facebook link
விரிவான விளக்கம்
மாஸ்க் அணிவதால் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதில் தடை ஏற்படும் எனும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது(மீண்டும்!). இம்முறை ஒரு செயல்முறை வீடியோவாக !
ஒரு சிறுமி கண்ணாடி குடுவைக்குள் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார். நெருப்பு எரியும் தருவாயில் குடுவையை மாஸ்க் மூலம் இறுக்கமாக மூடுகிறார். சிறிது நேரத்தில் நெருப்பு அணைந்து விடுகிறது. இந்த வீடியோவை பதிவேற்றிய நபர், " முக கவசத்தால் உங்கள் நுரையீரலை கெடுத்து விடாதீர்கள்” எனக் கூறி நெருப்பு தான் உங்கள் உயிர் எனப் பதிவிட்டிருக்கிறார்.
உண்மை என்ன ?

நெருப்பு எரிய ஆக்சிஜன் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 21%. மெழுகுவர்த்தி நெருப்பு ஏரிய காற்றில் குறைந்தது 18.8% ஆக்சிஜன் அளவு வேண்டும். நெருப்பு எரியும் சிறிய குடுவையை மாஸ்க்கை வைத்து இறுக்கமாக காற்றின் ஓட்டத்தை அடைப்பதன் நெருப்பு அணைந்து விடுகிறது. மனித நுரையீரலுக்கு அந்த அளவுகோல்கள் இல்லை. மருத்துவ நிலைமைகளில் மட்டுமே பிரத்யேகமாக ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. எனவே மெழுகுவர்த்தியையும், நுரையீரலையும் ஒப்பிடுவது அபத்தமானது.
மாஸ்க் என்பது துகள்களின் அளவைப் பொறுத்து சிறிய துகள்களைக் குறைக்கும் வடிப்பானே தவிர காற்று ஓட்டத்தை முழுமையாக மட்டுப்படுத்துவது இல்லை. துணி போன்ற மாஸ்க் ஆனது தூசி நுழைவைக் குறைக்கும், அதே நேரத்தில் N95 போன்றவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவை குறைக்கும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் என்பதே மாஸ்க் அணிய அறிவுறுத்துவதற்கான காரணம்.
மனிதர்களாகிய நாம் மாஸ்க் அணிந்தாலும் சுவாசிக்கிறோம். சுவாசிக்கையில் காற்றினை உள்ளிழுத்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். மாஸ்க் அணிந்தாலும் இந்த செயல்முறை நடைபெறவே செய்கிறது. ஆனால், குடுவைக்குள் காற்றினை இழுக்க வழி இல்லை, நாம் காற்றை எடுத்துக் கொள்கிறோம். மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் அளவு குறைகிறது என பரவும் தகவலை சர்வதேச அளவில் மருத்துவர்களும், மருத்துவ அறிக்கைகளும் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
மேலும் படிக்க : மாஸ்க் அணியாமல் இருந்தால், மூக்கின் அருகே ஃபேன் வைத்தால் ஆக்சிஜன் அதிகரிக்குமா ?
பல வகையான மாஸ்க் அணிந்து ஆக்சிஜன் அளவு குறைகிறதா இல்லையா என்பதை மருத்துவர்கள் சோதித்து காட்டிய வீடியோக்களை முந்தைய கட்டுரையில் நாம் இணைத்து இருந்தோம்.
மாஸ்க் அணியாமல் இருப்பதை விட மாஸ்க் அணியும் போது தொற்று வெளியேறும் வேகம் குறையும் காட்சியை சோதனை மூலம் காண்பிக்கும் வீடியோ nist.gov தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டு இருப்பதை பார்க்கலாம்.
இன்னும் சிலர் மாஸ்க் அணிந்து வேகமாக ஊதினால் கார்பன்டை ஆக்ஸைடு கூட வெளியேறுவது கடினம் எனக் கூறுகிறார்கள். இதற்கான விளக்கத்தை முந்தைய கட்டுரையிலேயே நாம் குறிப்பிட்டு இருந்தோம்.
" மாஸ்க் அணிந்து இருக்கும் போது வெளியேறும் காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு(CO2) செறிவு இருக்கும். இது வளிமண்டலத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அது மாஸ்கில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுகிறது. இது காற்றோட்டத்தை கட்டுப்படுத்தாது. வளிமண்டல காற்றோடு ஒப்பிடும் போது உள்ளிழுக்கும் காற்றில் செறிவு கலந்துவிடும், ஆனால் ஆக்சிஜன் நிலையில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
துணி மாஸ்க் மற்றும் அறுவை சிகிச்சை மாஸ்க் ஆனது N95ஐ விட குறைவான ஆபத்தே. N95 மாஸ்க்கை சுகாதாரப் பணியாளர்கள் நீண்ட நேரம் அணிந்து இருப்பதால் உள்ளிழுக்கும் காற்றில் CO2 அளவு அதிகரிக்கலாம், ஆனால் அது O2 அளவை மாற்றாது. இதனால் அவர்களுக்கு சோர்வு, தலைவலி போன்றவை இருக்கலாம். ஆனால், அது இரத்தம் அல்லது காற்றில் O2 அளவைக் குறைக்காது " என மருத்துவர் பிரவீன் அவர்கள் கூறியதை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
சுகாதாரப் பணியாளர்கள் மாஸ்க் மட்டுமின்றி பல பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு பல மணி நேரம் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் கிடைக்காது என்றால் முதலில் முன்கள பணியில் இருக்கும் மருத்துவர்களே மாற்று வழியை தேடி இருப்பார்கள். ஆனால், தற்போது வரை மருத்துவர்கள் பொதுமக்களை மாஸ்க் அணியும்படியே அறிவுறுத்தி வருகின்றனர்.
மாஸ்க் ஆனது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் வேகத்தை குறைக்கும் என்பதற்காகவே பரிந்துரைக்கப்படுகிறது. மாஸ்க் அணிவதால் சிலருக்கு எரிச்சல், அழுத்தம் ஏற்படலாம். ஆனால், மாஸ்க் அணிவதால் ஆக்சிஜன் குறையாது என மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சில தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டே இருக்கின்றன. தவறான தகவல்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையால் இருத்தல் அவசியம்.