YouTurn

பின்லாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் திட்டம் அறிவிக்கப்பட்டதா ?

பின்லாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் திட்டம் அறிவிக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின், இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும், அதிலும் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின்...

பரவிய செய்தி

பின்லாந்து நாட்டின் பிரதமர், " வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, அந்த நான்கு நாட்களிலும் நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை " என குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். " 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லையே " என்றுக் கேட்கிறார் அவர். ஏற்கனவே பின்லாந்தில் " வாரத்திற்கு ஐந்து நாட்கள்/8 மணி நேரம் என்பது அமலில் இருக்கிறது.



Facebook | archived link

விரிவான விளக்கம்

பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின், இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும், அதிலும் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியும் எனத் தெரிவித்து உள்ளதாகவும் தமிழின் முன்னணி செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.



News link | archived link

இச்செய்தி இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகி அதிகம் பேசப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் முன்னணி செய்தி நிறுவனங்களின் இணையதளங்களிலும் இச்செய்தி வெளியாகி இருப்பதை காண நேரிட்டது.

உண்மை என்ன ?

34 வயதான பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறித்து முன் வைத்த திட்டம் தொடர்பாக பரவி வரும் கதைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மாரின் உடைய பின்லாந்து அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் விளக்கி உள்ளது.



Twitter link | archived link 

" பின்லாந்து அரசின் திட்டத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. பின்னீஸ் அரசின் செயல்திட்டத்தில் அப்படி ஏதுமில்லை. பிரதமர் சன்னா மாரின் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொழுது நடைபெற்ற ஒரு குழுக் கூட்டத்தில் அந்த கருத்தைக் கூறினார். சமீபத்தில் அப்படி எந்தவொரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை " எனக் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வேலை நாட்கள் மற்றும் நேரத்தைக் குறைப்பது குறித்து சன்னா மாரின் பேசியது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொழுது என பின்லாந்து நாட்டின் அரசு விளக்கி உள்ளது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சன்னா மாரின் உடைய சோசியல் டெமோக்ரேட்ஸ் கட்சியானது 4 கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்துள்ளது. சன்னா மாரின் பின்லாந்து நாட்டின் பிரதமர் ஆகிய பிறகு வேலை நேரம் குறித்த கருத்தையோ அல்லது திட்டத்தையே முன் வைக்கவில்லை.

கடந்த காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது சன்னா மாரின் முன்வைத்த கருத்தை சமீபத்தில் பிரதமராகிய பிறகு கொண்டு வந்துள்ளதாக வதந்தியை பரப்பி, இறுதியில் சர்வதேச அளவில் தொடங்கி தமிழின் முன்னணி செய்தி ஊடகங்களிலும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…