YouTurn

செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக வதந்தி !

செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

செங்கோட்டையில் இந்தியக் கொடி அகற்றப்பட்டு, காலிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 26-தேதி விவசாயிகள் நடத்திய பேரணியின் போது டெல்லி செங்கோட்டையில் ஏறி இந்திய தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் ஆதரவு கொடியை ஏற்றியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன.



செங்கோட்டையில் ஏறியவர்கள் இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை என்றும், அருகே இருந்த மற்றொரு கோபுரத்தில் மற்றும் காலியான கம்பத்தில் நிஷான் சாகிப் என அழைக்கப்படும் சீக்கிய மதக் கொடியையும், விவசாய சங்க கொடி ஒன்றையும் பறக்க விட்டு உள்ளனர் என நாம் மீம்ஸ் வெளியிட்டும் சிலர் விரிவான பதிலைக் கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்திய தேசியக் கொடி :

செங்கோட்டை அருகே ட்ராக்டர் உடன் கூடி இருக்கும் போராட்டக்காரர்களின் நேரடி வீடியோ காட்சியில், தேசியக் கொடியுடன் இருக்கும் கோட்டையின் முழு பகுதியையும் காணலாம். அங்கு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொடிகளை ஏற்றிய கம்பம் காலியாக இருப்பதை காணலாம். கோட்டை சுவரின் மையப்பகுதியில் தேசியக் கொடி மட்டுமே பறந்து கொண்டு இருக்கிறது. மற்ற இருபுறமும் உள்ள கோபுரங்களில் கொடி ஏதுமில்லை.



ஏஎன்ஐ செய்தி தளம் வெளியிட்ட வீடியோவில், போராட்டக்காரர்கள் காலியாக இருக்கும் கொடி கம்பத்தில் ஏறி கொடியை ஏற்றுவதை காணலாம்.



Twitter link | Archive link 

அதேபோல், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட வீடியோவிலும் தேசியக் கொடிக்கு முன்பாக இருக்கும் காலியான கம்பத்தில் கொடியை ஏற்றுவதை காணலாம். கோபுரத்திலும், காலியாக இருந்த கம்பத்திலும் கொடிகளை ஏற்றி உள்ளனர். இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை.



Twitter link | Archive link 

காலிஸ்தான் கொடி சர்ச்சை :



Twitter link | Archive link 

போராட்டக்காரர்கள் ஏற்றிய கொடி காலிஸ்தான் இயக்க கொடி அல்ல. நிஷான் சாஹிப் என அழைக்கப்படும் சீக்கிய சமூதாயக் கொடியாகும். பொதுவாக, இது குருத்வாராவிற்கு வெளியேயும் ஏற்றப்பட்டு இருக்கும்.



இந்த ஆண்டின் குடியரசுத்தின அணிவகுப்பில் பஞ்சாப் மாநில ஊர்தியில் அதே சீக்கிய கொடியை இடம்பெறச் செய்துள்ளனர்.

மற்றொரு கொடி :

மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் மற்றொரு கொடி கிசான் மஸ்தூர் எக்தா கொடியாகும். கிசான் மஸ்தூர் எக்தா ஆனது போராட்டத்தில் பங்கு பெறும் பல்வேறு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பாகும்.



அதேபோல், செங்கோட்டை பகுதியில் இருந்த தீப் சித்து என்பவர் வெளியிட்ட வீடியோவில், இந்திய தேசியக் கொடி கீழே இறக்கப்படவில்லை என்றும், அவர்கள் கிசான் மஸ்தூர் எக்தா மற்றும் நிஷான் சாஹிப் ஆகிய கொடிகளை மட்டுமே ஏற்றியதாகக் கூறியுள்ளார்.

முடிவு :

நம் தேடலில், டெல்லி விவசாயிகள் ட்ராக்டர் பேரணியின் போது போராட்டக்காரர்கள் காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக பரப்பப்பட்ட தகவல் தவறானது. இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி மற்ற கொடிகளை ஏற்றியதாக பரப்பப்படும் தகவலும் வதந்தியே. காலியாக இருந்த கம்பத்தில் மற்றும் கோபுரத்தில் கொடியை ஏற்றி உள்ளனர். நிஷான் சாஹிப் எனும் சீக்கிய கொடி முத்திரையை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க