YouTurn

டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி!

டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

Farmers , விவசாயிகள் போராட்டம் இப்போ எங்கே போய் நிக்குது பாருங்க , இவர்களுக்கு Funding அதே புது தில்லி சிஎஎ போராட்ட குழுக்களுக்கு பட்டுவாடா பண்ண அதே குள்ளநரி கூட்டம் தான்..



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

Ranjithkumar Mavilayi எனும் முகநூல் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட சீக்கியர்கள் " காலிஸ்தான் வேண்டும் " என்கிற பதாகை உடன் போராடியதாக இப்புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். மேலும், சில முகநூல் குழுக்களில் அப்பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

" We Want Khalistan " எனும் வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இருக்கும் சீக்கியரின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில், ஊடகச் செய்திகளில் கோப்பு படமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.



" sikh youth federation bhindranwala " அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமிர்தசரசில் போராடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது. பதாகையிலும் அந்த அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த புகைப்படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என விரிவான தகவல் கிடைக்கவில்லை.



மேலும் படிக்க : வயதான விவசாயி தாக்கப்படவில்லையா ?| உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டெல்லி போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் மற்றும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டமெனப் பரப்பப்படும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க