YouTurn

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக வதந்தி !

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நிச்சயமாக இது 100% விவசாயிகளுக்கான போராட்டம் இதை நம்பினால் நீயும் இந்தியனே.

விரிவான விளக்கம்

சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் புகைப்படமானது டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி முகநூல் குழுக்களில் பகிர்ந்து வருவதை பார்க்க நேரிட்டது. இப்புகைப்படம் இந்திய அளவில் பிற மொழிகளிலும் வைரலாகி இருக்கிறது.



உண்மை என்ன ?

இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " dalkhalsa.blogspot.com எனும் தளத்தில் இதே புகைப்படம் 2013-ம் ஆண்டு இந்திய சுந்திர தின தேதியைக் குறிப்பிட்டு வெளியாகி இருக்கிறது. மேலும், தல் கல்சா யு.கே எனும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய தேசியக் கொடியை அவமதித்த புகைப்படங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன.



2013-ல் இந்திய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள், காஷ்மீரிகள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்கள் மத்திய லண்டனில் இந்தியன் ஹை கமிஷனுக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தல் கல்சா அமைப்பின் நிறுவனர் மன்மோகன் கல்சா ஆவார். அவர் 2017-ம் ஆண்டில் இறந்து விட்டார்.

2013-ம் ஆண்டில் லண்டன் நகரத்தில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு இந்திய தேசியக் கொடியை அவமதித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி!

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்களை வைத்து திட்டமிட்டு பல வதந்திகள் பரவி வருவதை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

மேலும் படிக்க : முஸ்லீம் நபர் சீக்கிய விவசாயியாக வேடமிட்டதாகப் பரப்பப்படும் ஃபோட்டோஷாப் வதந்தி!
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க