YouTurn

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து - எடிட் நியூஸ் கார்டு!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து - எடிட் நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.



Facebook link | Archive link

விரிவான விளக்கம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு  எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து பல நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது. வைரலாகும் நியூஸ் கார்டை உன்னிப்பாக பார்த்தாலே எடிட் செய்தது நன்றாக தெரிகிறது.

ஆனால், நையாண்டிக்காக வேண்டுமென்றே எடிட் செய்த நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் உலாவ விட்டு உள்ளனர். இதை வைத்து, வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததே பாஜக தானே, தற்போது என்ன ராகுல் காந்தி ஆட்சியா, இம்ரான் கான் ஆட்சியா என கிண்டல் செய்து வருகிறார்கள்.



Twitter link | Archive link 

2021 ஜனவரி 3-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், " பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது - எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் " என வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க