யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’Galatta Media’ வெளியிட்டுள்ள உண்மையான News card-ல் மாணவர்களுக்கான உதவி எண் பாடப்புத்தகத்தில் அச்சிடப்படுவது குறித்து தான் இருக்கிறது.
பரவிய செய்தி
கல்வி மட்டும் போதாது!
மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பாடப்புத்தகங்களின் ஓரத்தில் பக்க எண் அச்சடிப்பு. இது தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை என்று புகழாரம்.

Whatsapp Forward
விரிவான விளக்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ’உதவி எண்’ குறித்த புகைப்படத்தைக் பின்புலமாகக் கொண்டு, ’மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பள்ளிப் பாடப்புத்தகங்களில் பக்கம் எண்ணை பக்கத்தின் கீழ் அச்சடுவதற்கு பதிலாக பக்கத்தில் ஓரத்தில் அச்சடிக்கும் புதிய ஏற்பாட்டை தவெக அரசு முன்னெடுத்திருப்பதாக’ கூறும் News card ஒன்றை ’Galatta Media’ வெளியிட்டுள்ளதாக பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த News card ‘06/06/2026’ அன்று வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு, ’Galatta Media’ இணைய ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
’Galatta Media’ இணைய ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் இதே புகைப்படங்களுடன் கூடிய News card ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘மாணவர்வர்களின் விழிப்புணர்வுக்காக தமிழ்நாடு பள்ளிப் பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அரசியலமைப்பு முகப்புரை மற்றும் மாணவர்கள் உதவிக்கான அவசர எண்கள் அச்சிடிக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு மாணவர்கள் உதவிக்கான அவசர எண்கள் அச்சிடப்படுவது தவெக அரசு பொறுப்பேற்றக் கொண்ட பின்னர் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறையா? என்பது குறித்து தேடினோம்.

2021 நவம்பர் மாதம் ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிவரைகள் (counselling) வழங்க ’14417’ என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனிவரும் கல்வியாண்டுகளில் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் அந்த எண் அச்சிடப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ’Galatta Media’ மாணவர்களுக்கான உதவி எண் பாடப்புத்தகத்தில் அச்சிடப்படுவது குறித்து வெளியிட்ட News card-ஐ போலியாக Edit செய்து, பாடப்புத்தகத்தில் பக்கம் எண் ஓரமாக அச்சிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக கேலியாக மாற்றியுள்ளார்கள் என்பது தெரிகிறது.
முடிவு:
’Galatta Media’ வெளியிட்டுள்ள உண்மையான News card-ல் மாணவர்களுக்கான உதவி எண் பாடப்புத்தகத்தில் அச்சிடப்படுவது குறித்து தான் இருக்கிறது. இதனை போலியாக Edit செய்து பாடப்புத்தகத்தில் பக்கம் எண் ஓரமாக அச்சிடப்படும் என்று மாற்றி கேலியாக பரப்பிவருகிறார்கள்.