யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரப்பப்படுவது தவறான தகவல்.
பரவிய செய்தி
“துருக்கி விதித்த 18 மணிநேர காலக்கெடுவை பொருட்படுத்தாமல் இந்திய போர் கப்பல் ‘Trikhand’ துருக்கியால் சிறப்புரிமையாக பார்க்கப்படும் மத்திய தரைக்கடல் வழியாக கிரீஸ் நாட்டை அடைந்தது. இது மோடி தலைமையில் இந்தியா வலிமையான நாடாக மாறியிருப்பதை காட்டுகிறது”
- சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்


விரிவான விளக்கம்
கடலில் நிற்கும் போர் கப்பல், இந்திய பிரதமர், துருக்கி நாட்டின் அதிபர் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து, ‘மத்திய தரைக்கடலில் சவூதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளால் சிறப்புரிமை பார்க்கப்படும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இந்திய கடற்படையின் போர்க் கப்பல் ‘Trikhand’ பயணித்தது. இதனை கண்டித்து துருக்கி அக்கப்பலை திரும்பிச் செல்லும்படி 18 மணிநேரம் கெடு விதித்தது. ஆனால் இந்திய கப்பல் துருக்கியின் இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் அந்த கடற்பகுதி வழியாக சென்ற கிரீஸ் நாட்டை அடைந்தது. இது மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதற்கான மற்றொரு சான்றாகும்’ என்று சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் என்ற மோடி ஆதரவாளர் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பி வருகிறார்.
𝗧𝘂𝗿𝗸𝗶𝘆𝗲'𝘀 𝟭𝟴-𝗵𝗼𝘂𝗿 𝘂𝗹𝘁𝗶𝗺𝗮𝘁𝘂𝗺 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝘄𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 '𝗧𝗿𝗶𝗸𝗵𝗮𝗻𝗱'...
Late at night, the Turkish Coast Guard became alarmed when they saw a shape suddenly emerging from the Mediterranean Sea. Soon it is discovered to be a… pic.twitter.com/PhK70uoGot
மேலும் இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்புப் போரால் காஸாவில் மக்கள் பசி பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்காக ‘SUMUD Flotilla’ என்ற இயக்கம் சர்வதேச அளவிலான சமூக செயல்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த SUMUD Flotilla அனுப்பும் உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வருகிறது. இவ்வாறு ‘SUMUD Flotilla’ கடல் வழியாக கொண்டு வரும் நிவாரண பொருட்களை மத்திய தரைக்கடலில் தடுக்க இஸ்ரேல் கடற்படைக்கு உதவி செய்ய இந்திய போர் கப்பல் சென்றதாகவும் அதனை துருக்கி நடுவழியில் தடுத்து நிறித்தியதாகவும் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
மத்திய தரைக்கடல் பகுதியில் இந்திய போர்க் கப்பலை துருக்கி கடற்படை தடுத்த நிறுத்தியது குறித்து இணையத்தில் தேடினோம். இந்திய ஊடகங்களில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் எந்தவொரு ஊடகத்திலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி வெளியிடப்படவில்லை.
‘இந்திய கடற்படை, மத்திய தரைக்கடல்’ போன்ற keywords கொண்டு தேடுகையில், இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவுகளை காணமுடிந்தது. அதன் படி, இந்திய கடற்படையும் கிரீஸ் நாட்டின் கடற்படையும் இணைந்து செப்டம்பர் 13 முதல் 18 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
#IndianNavy - #HellenicNavy Maiden bilateral maritime exercise concluded on #18Sep 25 in the Mediterranean Sea, marking a milestone in India-Greece defence cooperation.
Harbour phase (13-17 Sep) included cross-deck visits, professional exchanges, a pre-sail conference onboard… https://t.co/V7EpESU1z5 pic.twitter.com/Q6ZbhWwJoo
மேலும் ‘SUMUD Flotilla’ கடல் வழியாக கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை மத்திய தரைக்கடலில் தடுக்க இஸ்ரேல் கடற்படைக்கு இந்திய போர் கப்பல் உதவி செய்தது குறித்து தேடிய போதும் இதற்கு சான்றாக எவ்வித செய்தியையும் காணமுடியவில்லை
இது குறித்து அக்டோபர் 02ஆம் தேதி ‘Reuters’ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின் படி, ‘SUMUD Flotilla அமைப்பால் கொண்டு வரப்பட்ட நிவாரணங்கள் அடங்கிய 40 படகுகளும், கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 450 செயல்பாட்டாளர்களும் இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது’ என்று தெரிய வருகிறது. இதில் இந்திய போர்க் கப்பல் இஸ்ரேலுக்கு உதவியதாக எவ்வித குறிப்பும் இல்லை.

இதிலிருந்து இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் மத்திய தரைக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பரப்பப்படுவது தவறான செய்தி என்பது தெளிவாகிறது.
முடிவு:
இந்திய போர்க் கப்பல் துருக்கி கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பி வருகிறார்கள்.