YouTurn

'வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ' எனப் பரவும் தவறான வீடியோ!

'வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ' எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

டாக்கா கல்லூரி மாணவரின் பழைய வீடியோவை, எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

வங்கதேசத்தில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் தாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அவரின் கடைசி வீடியோ தான் இது. 



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கடந்த மாதம் (டிசம்பர் 2025) தாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று “தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ. அவர் வங்கதேச காவல்துறையால் பிடிக்கப்பட்டு வன்முறையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்படுகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by India 🇮🇳 (@india.150crore)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், நவம்பர் மாதத்தில் இருந்தே ஊடகங்களில் பரவி வரும் வீடியோ செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. 



பரவி வரும் வீடியோவில் இருக்கும் நபர் குறித்து தேடியதில், தீபு சந்திர தாஸின் முகமும், இந்த வீடியோவில் காணப்படும் நபரின் முகமும் வேறுவேறாக இருந்ததை தெளிவாகக் காண முடிகிறது. 



NPB News” ஊடகம் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் வீடியோவில் காணப்படும் இளைஞர், என்னுடைய பெயர் ‘அப்துல் மோமின்’ என்று கூறுவதை வீடியோவில் தெளிவாகக் கேட்க முடிகிறது. மேலும் இளைஞர் அணிந்திருந்த டீ-சர்ட்டிலும் மோமின் என்ற பெயரும்,  டாக்கா கல்லூரியின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. 



மேலும் டாக்கா காவல்துறையின் துணை காவல் ஆணையர் (DC) மசூத் ஆலம், பரவி வரும் வீடியோவில் காணப்படும் இளைஞரை பத்திரமாக ரிக்ஷாவில் அனுப்பி வைத்தது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 



முடிவு: 


நம் தேடலில், டாக்கா கல்லூரி மாணவரின் பழைய வீடியோவை, வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க