யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நுழைவுவாயிலில் ஆங்கிலம் சேர்ப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழகத்தின் முக்கியமான ரயில்களின் பட்டியலை எடுத்தால் அதில் கோவில்பட்டி ரயில் நிலையம் நிச்சயம் இடம்பெறும். காரணம் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான இடமாக கோவில்பட்டி இருக்கிறது. தற்போது அங்குள்ள ரயில்நிலையம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் நிலையத்தின் முகப்பில் உள்ள ஊர் பெயர் தமிழ் மற்றும் இந்தியில் மட்டும் இருப்பதாகவும், ஆங்கிலத்தில் இல்லை எனவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து தேடி பார்த்தோம் பார்த்தோம். அப்போது 'kovilpatti_appatakkers' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மே 27 அன்று New entrance kovilpatti railway station என்று ஒரு வீடியோ பதிவாகியிருந்ததை காணமுடிந்தது. அந்த வீடியோவில் ரயில் நிலையத்தின் முகப்பு இடம்பெற்றுயிருந்தது. அதில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கோவில்பட்டி என்று எழுதியிருந்ததை காணமுடிந்தது.
இதை மேலும் உறுதி செய்ய நுழைவுவாயிலின் கட்டுமானப் பணி அங்கு இன்னும் முடிவடையாத நிலையில், யூடர்ன் தரப்பிலிருந்து தற்போதைய கோவில்பட்டி ரயில் நிலைய புதிய நுழைவு வாயிலின் புகைப்படத்தை எடுத்து அனுப்புமாறு அங்குள்ள மக்களிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆங்கிலத்திலும் கோவில்பட்டி என்று எழுதப்பட்டுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.

இந்நிலையில் நுழைவுவாயிலில் ஆங்கிலம் சேர்ப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், கோவில்பட்டி ரயில் நிலைய புதிய நுழைவு வாயிலில் ஆங்கிலம் இல்லை, தமிழ் மற்றும் ஹிந்தி மொழியே காணப்படுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
