யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ‘Treevia’ என்ற சாக்லேட் நிறுவனம் இதுபோன்ற சாக்லேட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ‘Treevia’ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் இதுபோன்ற சாக்லேட் பெட்டிகளை காணமுடிகிறது. அந்த பெட்டிகளின் உள்ள ‘Treevia’ நிறுவனத்தின் Logo-வான மரம் இருப்பதையும் காணமுடிகிறது.
பரவிய செய்தி
Saudi wedding ceremony
Bride’s brother offers 24 karat Gold biscuits to Groom’s family

விரிவான விளக்கம்
சவுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமகளின் சகோதரர் மணமகனின் குடும்பத்திற்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளை வழங்குகிறார் என்றுக் கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் பெட்டியில் தங்கம் பிஸ்கட் போல் தோற்றம் அளிக்கும் ஒன்றை, அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
Saudi wedding ceremony
Bride’s brother offers 24 karat Gold biscuits to Groom’s family 😳
pic.twitter.com/2lOAZwUhoi
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் சரியாக 0:21 நொடியில் ஒருவர் அந்த பெட்டியில் இருந்த தங்கம் பிஸ்கெட்டை எடுத்து பிரிக்க முயல்கிறார். இந்த காட்சி சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம்.
அப்போது Treevia என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த பக்கத்தில் ஜூலை 21, 2025 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள பெட்டியை போன்று, இந்த புகைப்படத்தில் உள்ள பெட்டியும் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் அந்த பதிவில் ட்ரிவியா சாக்லேட் பார் பேக் என்றும், பெல்ஜிய சாக்லேட் பார்கள் சுவையாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து தேடிய போது, சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ‘Treevia’ என்ற சாக்லேட் நிறுவனம் இதுபோன்ற சாக்லேட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ‘Treevia’ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் இதுபோன்ற சாக்லேட் பெட்டிகளை காணமுடிகிறது. அந்த பெட்டிகளின் உள்ள பரவி வரும் வீடியோவில் இருப்பது போல், ‘Treevia’ நிறுவனத்தின் Logo-வான மரம் இருப்பதையும் காணமுடிகிறது.
அதே போல் NDTV ஊடகத்தில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் இவை ஆடம்பர சாக்லேட்டுகள் என்றும், தங்க பிஸ்கெட்களை போல் தோற்றமளிக்க தங்க நிற படலத்தில் சுற்றப்பட்டிருப்பதாகவும், இவை பெரும்பாலும் மத்திய கிழக்கில் திருமணங்களில் பரிசாக வழங்கப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், பரவி வருவது ‘Treevia’ என்ற நிறுவனத்தின் சாக்லேட் வகைகளாகும். இதை 24 காரட் தங்க கட்டிகள் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.