YouTurn

தமிழ்நாட்டில் செயலி மூலம் மது விற்கப்படுவதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

தமிழ்நாட்டில் செயலி மூலம் மது விற்கப்படுவதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய அனுமதித்துள்ளன.

பரவிய செய்தி

Drink App online Wineshop

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

இனி மேல் மதுபானங்களை செயலி மூலம் வீட்டிற்கே door delivery செய்யும் முறையை  தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. 



உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தேடி பார்த்தோம். அப்போது Financial Express ஊடகப்பக்கத்தில் ”Zomato, Swiggy, BigBasket & Blinkit to launch liquor home delivery?” என்ற தலைப்பில் ஜூலை 16, 2024 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் டெல்லி, கோவா, ஹரியானா, கேரளா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் Zomato, BigBasket மற்றும் Swiggy போன்ற ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்வதற்கான வழித்தடத்தை ஆராய்ந்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து ஸ்பிரிட் தயாரிப்பாளர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்யும் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய அனுமதித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடுகையில், செப்டம்பர் 8, 2021 அன்று The Hindu ஊடகத்தில், ”No plan to introduce online liquor sale: govt” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆன்லைனில் மதுபான விற்பனையை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதையடுத்து தினமலர் ஊடகப்படத்தில், ஜூலை 17, 2024 அன்று ” வீடு தேடி வரும் மதுபானங்கள்: ஸ்விக்கி - சொமேட்டோ திட்டம்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழகத்தில், மது வகைகள், 'டோர் டெலிவரி' செய்யப்படாது என்றும், எந்த புதிய திட்டமும் தங்களிடம் இல்லை என 'டாஸ்மாக்' நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, தனியார் செயலி மூலம் தமிழ்நாட்டில் மது விற்பனை எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை. இது குறித்து எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டே மறுப்பு தெரிவித்திருந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க