யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’பஹல்காம்’ தாக்குதலை ஒட்டி சமூக வலைத்தளங்களில் செய்திகளை திரித்து தவறாக தகவல்களை பரப்பி வருகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.
பரவிய செய்தி
'பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் பொய் செய்திகள்.
Claim 1: கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம்
பாக்கிஸ்தான் கோடியை எரித்து போராட்டம்!

Claim 2: 26 பேரை சுட்டுக் கொன்றதை கேக் வெட்டி கொண்டாடும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அலுவலகம்!

Claim 3: பாகிஸ்தானில் #உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளது..

விரிவான விளக்கம்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்னும் சுற்றுலாத்தளத்தில் கடந்த 22ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் இந்த சம்பவத்தை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் தவறாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம் 🔥
பாக்கிஸ்தான் கோடியை எரித்து போராட்டம் 🚩🚩🇮🇳 pic.twitter.com/V8xBrkBiIr

பாகிஸ்தானில் #உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளது..
தற்போது பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்துங்கள்.
- பாகிஸ்தானில் உள்ள பாலூசுஸ்தான் மக்கள் 🤣🤣
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று பாகிஸ்தானில் உள்ள பலூச்சிஸ்தான் மாநிலமக்கள் மிகவும் சத்தமாகவும்… pic.twitter.com/GIDtFTR0xs
உண்மை என்ன?
Claim 1: கேரளாவில் பாகிஸ்தான் கோடியை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’JK City News’ என்ற யூட்யூப் தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ’பஹல்காம்’ தாக்குதலைக் கண்டித்து ஜம்மு மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்திய குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தேடியதில், ’First India News’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ஜம்முவில் ’பஹல்காம்’ தாக்குதலைக் கண்டித்து ‘டோக்ரா முன்னணி’ என்ற அமைப்பு போராட்டம் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரியவருகிறது.

’பஹல்காம்’ தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் நடந்த போராட்டத்தை கேரளாவில் நடந்ததாக தவறாக பரப்புக்கிறார்கள்.
Claim 2: பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டதாக பரப்பப்படும் செய்தி.
உண்மை: இதுகுறித்து இணையத்தில் தேடியபோது, ‘WION News’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், அதிகாரி ஒருவரின் மனைவி பிறந்தநாளுக்காக ஐந்து நாட்களுக்கு முன்பாகவே ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விளக்கமளித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை திரித்து, பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டதாக பாஜக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.
Claim 3: பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பலூச்சிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போராட்டம் நடத்துவதாக பரப்பப்படுகிறது.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘ANI News’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், ‘கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில், பலூச் மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்துவதை கண்டித்து பலூச் குடியரசுக் கட்சி (BRP) சார்பில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக’ குறிப்பிடுகிறது.

அதேபோல், ‘The Earth News’ என்ற யூட்யூப் தளத்தில், ‘பாகிஸ்தானின் கொடுமைகளை எதிர்த்து பலூச் இன செயல்பாட்டாளர்கள், ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள பாகிஸ்தான் உதவி மையத்தின் (Consulate) முன் போராட்டம் நடத்தியதாக’ குறிப்பிடுகிறது. இந்த செய்தி 2019 செப்டர்பர் மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதிலிருந்து இது ஐந்தாண்டுகள் பழைய செய்தி என்பது உறுதியாகிறது.
இந்த ஐந்தாண்டுகள் பழைய செய்திவின் வீடியோவை பதிவிட்டு, தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பலூச்சிஸ்தான் மாநில மக்கள் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போராட்டம் நடத்துவதாக பாஜக ஆதரவாளர்கள் தவறான தகவலை பரப்புகிறார்கள்.
முடிவு:
இவ்வாறு ஜம்முவில் நடந்த போராட்டத்தை கேரளாவில் நடந்ததாகவும், பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டதாகவும், பலூச்சிஸ்தான் மக்கள் பாகிஸ்தானை எதிர்த்து உள்நாட்டுப் போராட்டம் நடத்துவதாகவும் திரிக்கப்பட்ட தவறான செய்திகளை பாஜக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.