YouTurn

‘திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது’ என உத்தரவிட்டதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?

‘திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது’ என உத்தரவிட்டதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த A.P. ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சேர்ந்தே உயர்நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது எனக் கூறி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே உத்தரவிட்டது. எந்தவொரு இந்துத்துவ அமைப்போ, RSS மற்றும் பாஜகவினரோ அவ்வாறு எதுவும் கூறவில்லை. 


YouTube Link: 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில்  சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் “தவெக தமிழ்நாட்டை ஏன் ஆளவேண்டும்? ஏன் விஜய்?” என்பது குறித்து தனியார் ஊடகம் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவெகவினர், “திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே உத்தரவிட்டது. எந்தவொரு இந்துத்துவ அமைப்போ, RSS மற்றும் பாஜகவினரோ அவ்வாறு கூறவில்லை” என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவில் பேசியுள்ள கருத்துகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த A.P. ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சேர்ந்தே உயர்நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது எனக் கூறியும், மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறும், கந்தர் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்குமாறும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பதை, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணத்தில் தெளிவாகக் காண முடிந்தது. 



மேலும் இந்த வழக்கில் "தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அப்படியிருக்கும்போது அவர்களின் நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது" எனக் கூறியே இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



இறுதியில் இந்த வழக்கின் தீர்ப்பில், "திருப்பரங்குன்றம் மலையில் சுமார் 172.2 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்லியல் கழகம் அறிவித்துள்ளது. அங்கு விலங்குகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டு செல்லக் கூடாது. அங்கு விலங்குகளை பலியிடக்கூடாது” எனக் கூறி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இமாம் ஹுசைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சமநிலையோடு இருக்கிறது. அதில் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே உத்தரவிட்டது எனக் கூறி தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.



முடிவு: 


நம் தேடலில், "திருப்பரங்குன்றத்தில் ஆடு, மாடு பலியிடக்கூடாது என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே உத்தரவிட்டது" என தவெகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க