யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"திருவல்லிக்கேணி - ஐஸ் ஹவுஸ் பள்ளி முதல் காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை" என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
பரவிய செய்தி
திருவல்லிக்கேணி - Ice House பள்ளி முதல், "Muhamadian" Library வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை. அதை TH High Road, Triplican High Road என்று தான் கடைகளில் நிறுவனங்களில் பெயர் வைக்கிறார்கள், பதாகைகளில் எங்குமே காயிதே மில்லத் என்ற பெயர் இல்லை. இது போன்று பல்வேறு முஸ்லிம் பெயர் கொண்ட சாலைக்கு நிகழ்கிறது. இது திட்டமிட்ட இஸ்லாமிய அடையாள அழிப்பு என்பது போல தான் தோன்றுகிறது.
வடக்கில் இஸ்லாமிய பெயர் கொண்ட ஊர்களை மாற்றி கொண்டு வரும் காலத்தில் தெற்கில் சிறுக சிறுக இது நிகழ்ந்து கொண்டு இருக்கிறதா ? சென்னை அனகாபுத்தூர் இல் காயிதே மில்லத் சாலையில் உள்ள மக்கள் தான் வெளியேற்றபட்டர்கள், அவர்கள் வீடுகள் இடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இன்று காயிதே மில்லத் பிறந்த தினமாம்.
விரிவான விளக்கம்
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனருமான மறைந்த காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று (ஜூன் 05) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், திருவல்லிக்கேணி - ஐஸ் கவுஸ் பள்ளி முதல், முகமதியன் நூலகம் வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்குமே இல்லை. அதை "TH High Road, Triplican High Road" என்று தான் கடைகளில் நிறுவனங்களில் பெயர் வைக்கிறார்கள், பதாகைகளில் எங்குமே காயிதே மில்லத் என்ற பெயர் இல்லை என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி - Ice House பள்ளி முதல், "Muhamadian" Library வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை. அதை TH High Road, Triplican High Road என்று தான் கடைகளில் நிறுவனங்களில் பெயர் வைக்கிறார்கள், பதாகைகளில் எங்குமே… https://t.co/33nnS99vrt
உண்மை என்ன?
பரவி வரும் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய, திருவல்லிக்கேணி - ஐஸ் கவுஸ் பள்ளி முதல் உள்ள சாலைகளை கூகுள் மேப்பில் ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், "காயிதே மில்லத் சாலை" என்று பெரும்பாலான இடங்களில் பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை புகைப்படங்களில் தெளிவாகக் காணமுடிகிறது.

இதன் மூலம், "திருவல்லிக்கேணி - ஐஸ் கவுஸ் பள்ளி முதல், முகமதியன் நூலகம் வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை" என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
மேலும் இதை உறுதி செய்யும் விதமாக, யூடர்ன் தரப்பிலிருந்து நேரிலேயே சென்று ஆய்வு செய்து பார்த்து அதன் புகைப்படத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

மேலும் மறைந்த காயிதே மில்லத்தின் நினைவாக ஆரம்பத்தில், தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. இதே போன்று காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. அவற்றில் காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் காயிதே மில்லத் ஆண்கள் கலைக் கல்லூரி ஆகியவை அடங்கும். இந்நிலையில் உண்மைத்தன்மை அறியாமல் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், திருவல்லிக்கேணி - ஐஸ் கவுஸ் பள்ளி முதல், முகமதியன் நூலகம் வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.