YouTurn

மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எடுத்த வீடியோ எனப் பரவும் தவறான செய்தி!

மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எடுத்த வீடியோ எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மதன் கெளரி, கடந்த 2019-ல் நேபாளம் நாட்டிற்கு சென்று அங்குள்ள பாகிஸ்தானியர்களை பேட்டியெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்

பரவிய செய்தி

URBAN NAXAL MADAN GOWRI! 5 வருடம் முன்பு பாகிஸ்தான் சென்று அங்கே இருக்கும் இந்துக்கள் Safe எனவும் தீவிரவாத தாக்குதல்களை Whitewash செய்த முதல் யூடியூபர் தான் இந்த கேடுகெட்ட மதன் கெளரி . இன்று பஹல்காம் குறித்து இன்னும் பேசாமல் உள்ளான் இந்த பொறுக்கி!

 X Link | Archive Link

விரிவான விளக்கம்

யூடியூபர் மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அங்குள்ள இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ எடுத்துள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


பரவி வரும் அப்பதிவில் “5 வருடம் முன்பு பாகிஸ்தான் சென்று அங்கே இருக்கும் இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தீவிரவாத தாக்குதல்களை Whitewash செய்த முதல் யூடியூபர் தான் இந்த கேடுகெட்ட மதன் கெளரி. இன்று பஹல்காம் குறித்து இன்னும் பேசாமல் உள்ளான் இந்த பொறுக்கி!“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


மேலும் மதன் கெளரி தனது யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பரவி வரும் வீடியோ குறித்து  குறிப்பிட்டு பேசியிருந்ததையும் காண முடிந்தது. 



மேலும் ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி, கடந்த 2019-ல் “🇳🇵NEPAL VLOG | What Pakistan Thinks about South India 🇮🇳 | Madan Gowri | Tamil | MG“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



வீடியோவை ஆய்வு செய்ததில், இது மதன் கெளரி, கடந்த 2019-ல் நேபாளம் நாட்டிற்கு சென்று அங்குள்ள பாகிஸ்தானியர்களை பேட்டியெடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ. இதை பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது. 


முடிவு: 


நம் தேடலில், யூடியூபர் மதன் கெளரி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அங்குள்ள இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ எடுத்துள்ளதாகக் கூறி பரவும் வீடியோ நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.