YouTurn

அமெரிக்க அரசு KFC உள்ளிட்ட உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்ததாக பரப்பப்படும் வதந்தி!

அமெரிக்க அரசு KFC உள்ளிட்ட உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்ததாக பரப்பப்படும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

KFC, மெக்டொனால்ட்ஸ், டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்களின் ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசு ரத்து செய்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது.

பரவிய செய்தி

அமெரிக்க அரசு இஸ்லாமிய சட்டப்படி செய்யப்பட்ட வெட்டுக்களை குறிப்பிடும் ஹலால் சான்றிதழை ரத்து செய்துள்ளது.

அமெரிக்க அரசே ஹலால் சான்றிதழை ரத்து செய்ததன் விளைவாக, மெக்டொனால்ட்ஸ், கெண்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC), டோமினோஸ், பீட்சா ஹட் மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகிய உணவகங்கள் இனிமேல் ஹலால் அல்ல.


image.png


WhatsApp Forward

விரிவான விளக்கம்

’ஹலால்’ என்ற அரேபிய சொல்லுக்கு ‘இஸ்லாமிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள். உணவு விஷயத்தில் ‘ஹலால்’ என்பது இஸ்லாமியர்கள் எவ்வகையான உணவுகளை உண்ணலாம், எதை தவிர்க்க வேண்டும் என்பதை குறிப்பதாகும்.


இந்நிலையில், 'KFC போன்ற பிரபலமான உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் "LM10" என்னும் பொருள் பன்றியிலிருந்து எடுக்கப்படுவதாகவும், அமெரிக்க அரசு இந்த உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்துள்ளதாகவும், இதனால் மெக்டொனால்ட்ஸ், KFC, டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்கள் இனிமேல் ஹலால் அல்ல’ என்றும் WhatsApp செயலி மூலம் பரப்பப்படுகிறது. இதே தகவல், பேஸ்புக் போன்ற பிற சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


அமெரிக்காவில் ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது குறித்து இணையத்தில் தேடியதில், ‘Sinar Daily’ என்ற செய்தித்தளத்தில் இதுகுறித்து 2024 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.


image.png


அந்த செய்தியில், ‘மெக்டொனால்ட்ஸ், KFC, டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதாக பரப்பப்படுவது வதந்தி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வதந்தி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதும், அதனை ‘Jakim’ என்ற சர்வதேச உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அளிக்கும் மலேசிய நிறுவனம் மறுத்து வந்திருப்பதும் தெரியவருகிறது.


மேலும் KFC போன்ற உணவு நிறுவனங்கள் மலேசிய நிறுவனத்தின் ஹலால் சான்றிதழ் வைத்திருப்பதாகவும், அது இன்றும் செல்லத்தக்கது என்றும் இந்த செய்தி குறிப்பிடுகிறது. 


மேலும், பரப்பப்படும் இந்த தகவலில் ’MJC என்ற இஸ்லாமிய நீதிமன்றக் கழகம்’ இந்த சான்றிதழை ரத்து செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘MUSLIM JUDICIAL COUNCIL HALAAL TRUST’ என்ற அதன் இணையத்தில் பார்க்கும் போது, ’KFC உணவகத்தின் ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல் தவறானது’ என்றும், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து, இந்த தகவல் பொய்யானது என்பதை தெளிவாகிறது.


மேலும், WhatsApp செயலி மூலம் பரப்பப்படும் இந்த தகவல், ஆறு மாதங்களுக்கு முன்பாக ‘Linkedin’ தளத்தில் பரப்பப்பட்டிருப்பதை காண்கிறோம். இதிலிருந்து இந்த பொய்யான தகவல் நீண்டகாலமாக இணையத்தில் சுற்றி வருவதாக அறிய முடிகிறது.


முடிவு:


மெக்டொனால்ட்ஸ், KFC, டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்களின் ஹலால் சான்றிதழை அமெரிக்க அரசு ரத்து செய்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. மேலும் இந்த பொய்யான தகவல் நீண்டகாலமாக இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க