YouTurn

வங்கதேசத்தில் இந்து கடைகள் சூறையாடப்படுவதாகப் பரவும் பொய்!

வங்கதேசத்தில் இந்து கடைகள் சூறையாடப்படுவதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் இந்து கடைகளை இஸ்லாமியர்கள் சூறையாடுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர் பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளை சூறையாடுகிறார்கள்.

X link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் ஒரு கட்டத்தில் அரசை எதிர்த்து மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். 


இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடையைச் சூறையாடுவதாக வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் ஒருவர் ‘Yellow’ என்ற வார்த்தை அச்சிடப்பட்ட பையைக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. அதே போல் ’On Fire’ என்ற கடையின் பெயரையும் காணலாம். இந்த கடைக்குப் பக்கத்தில் உள்ள கடையில் இருந்துதான் அதிகப்படியான மக்கள் வெளிவருகின்றனர். ஆனால் அக்கடையின் பெயர் தெரிவவில்லை.


On fire என்ற கடை எங்கு உள்ளது எனக் கூகுள் மேப் மூலம் தேடினோம். அந்தக்கடை வங்கதேசத்தில் உள்ள டாக்கா (Dhaka) என்ற இடத்தில் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ளது. Google street view மூலம் பார்த்ததில் on fire கடைக்குப் பக்கத்தில் ‘Yellow’ என்ற துணிக்கடை உள்ளது. 


இக்கடையின் உரிமையாளர் பெயர் ‘சல்மான் ரஹ்மான்’ என ‘Fortune India’ என்ற தளத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பெயரைக் கொண்டு அவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. Beximco Group என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் தொழில்முனைவோராக உள்ளது. அதில் ஒன்றுதான் Yellow என்ற துணிக்கடை.


வங்கதேசத்தில் நடக்கும் போராட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில் மக்கள் அங்குள்ள கடைகளிலிருந்து பொருட்களை யாரின் அனுமதியின்றி எடுத்துச் செல்கின்றனர். இதில் இந்து கடை முஸ்லிம் கடை என எந்த பாகுபாடும் இல்லை. ஆனால், இந்தியாவில் உள்ள வலதுசாரிகளோ அத்தகைய செயலுக்கு மத அடையாளத்தைப் பூசி பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

முடிவு: 

வங்கதேசத்தில் இந்து கடைகள் சூறையாடப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. ‘Yellow’ என்ற கடையின் உரிமையாளர் ஒரு முஸ்லிம்.

 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க