YouTurn

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் தாக்குதலில் இருந்து உயிரை காக்க குளத்தில் குதித்த இந்து எனப் பரவும் வதந்தி!

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் தாக்குதலில் இருந்து உயிரை காக்க  குளத்தில் குதித்த இந்து எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குளத்தில் குதித்து தப்பிய நபரின் பெயர் தக்ஜில் கலீஃபா காஜல். அவர் ஒரு முஸ்லிம். மேலும், அவாமி கட்சியை சேர்ந்த அவர் வங்கதேசத்தில் உள்ள அகௌரா நகராட்சியின் மேயராகவும் உள்ளார்.

பரவிய செய்தி

பங்களாதேஷின், இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஒரு குளத்தில் குதித்தார், பயங்கரவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு தண்ணீருக்குள் கல்லெறிந்து கொன்றனர். சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களின் நிலைமை

X link | Archive link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. போராட்டம் அசாதாரண சூழலை எட்டியதைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டிலிருந்து தப்பித்தார்.


இந்நிலையில் இஸ்லாமியர்களால் தாக்கப்படும் இந்து ஒருவர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள குளத்தில் குதித்து தப்பி செல்கிறார். தண்ணீரில் குதித்த நிலையிலும் அவர் தொடர்ந்து கற்களால் தாக்கப்படுகிறார் என்று பாஜகவை சேர்ந்த அசோக் என்பவர் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், இதுதொடர்பாக Mzamin, The Daily Campus, Juktadhara தளங்களில் செய்தி வெளியாகி இருப்பதை காணமுடிந்தது. 


வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பித்தார். அவாமி கட்சிக்காரர்களையும் அவர்களது வீடுகளையும் போராட்டக்காரர்களில் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். 

அப்படி அகௌரா நகராட்சியின் (Akhaura Municipality) மேயரும் அவாமி கட்சியின் முக்கிய பொறுப்பாளருமான Takjil Khalifa Kajal என்பவரை போராட்டக்கார்கள் சூழ்ந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிக்க தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றுள்ளார். 

அவர் அப்படி தப்பிச் சென்ற வீடியோவுடன் ‘Jamuna TV’ என்ற யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து பரவக்கூடிய வீடியோவில் உள்ள நபர் அவாமி கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் என்பதை அறியமுடிகிறது.

 
ஆனால்,  வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை இஸ்லாமியர்கள் தாக்குவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புகின்றனர். இப்படி வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல பொய் செய்திகளும் வதந்திகளும் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. அது குறித்த உண்மைகள் கட்டுரைகளாக யூடர்னில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு: 

வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் இணைந்து இந்து ஒருவரை தாக்குவதாகவும் அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் குதித்து தப்பிப்பதாகவும் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.  அது அவாமி கட்சியை சேர்ந்தவரான Takjil Khalifa Kajal என்பவர் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ.

  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க