யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. புயல் குறித்த செய்திகளே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பிரதானமாகி உள்ளது.
[video width="480" height="848" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2020/11/WhatsApp-Video-2020-11-24-at-4.54.49-AM.mp4"][/video]
இந்நிலையில், மழையில் சென்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தின் மீது கட்டிடத்தில் இருந்த விளம்பர பலகை போல் ஒன்று விழுந்து விபத்து நேரிடும் 19 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நிகழ்ந்த சம்பவம் என வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர்ந்து உள்ளார். வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என பலரும் யூடர்னை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.
வைரலாகும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்ததாக Insider paper உடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
Twitter archive link
பாகிஸ்தானில் மழையில் நிகழ்ந்த விபத்தை சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி உள்ளார்கள். தற்போது மீண்டும் சென்னையில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

ALERT 🚨 Hoarding falls down on a bike riding man in #Karachi, Pakistan during rain near #Metropole area of the city. pic.twitter.com/vBXXw6Ew6p
— Insider Paper (@TheInsiderPaper) August 7, 2020