YouTurn

2026 சட்டசபை தேர்தல் குறித்து பரவும் போலி கருத்துக்கணிப்பு செய்திகள்!

2026 சட்டசபை தேர்தல் குறித்து பரவும் போலி கருத்துக்கணிப்பு செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் என்று கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றன. அவற்றில் போலி செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: 


 ‘ABP நாடு’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 



X Link | Archive Link


பரவிய செய்தி 2: 


தந்திடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. 


இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் என்று கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றன. 


#BigBreaking 🚨

IBC தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பு, தமிழ்நாட்டில் கடந்த 5 வருடங்களில் மக்கள் பிரச்சனையில் மக்கள் கூட நின்ற எதிர் கட்சி எது? முடிவுகள்...
#OpinionPolls2026 pic.twitter.com/rZ7nwSWb7s

— மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ (@mervinJeyamani) March 22, 2026


குறிப்பாக அதில், ‘ABP நாடு’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 'தவெக' 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாகவும்,  ‘NDTV’ கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கூறிப் பரப்பி வருகின்றனர். 



இதே போன்று, ‘IBC தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள சிறப்பு கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சியே முன்னிலை என்றும், தந்திடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை, திமுக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறி நியூஸ்கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 



#VijayWave🌊 pic.twitter.com/BvPrYQV48I

— S D Raja - Returns (@raja_sd22122) April 21, 2026


உண்மை என்ன?


''ABP நாடு’ கருத்துக்கணிப்பில் 'தவெக' 172-179 தொகுதிகளில் வெற்றி' எனப் பரவும் போலி நியூஸ் கார்டு!


 ‘ABP நாடு’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 50-58 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.


#DMK #ADMK #TVK #NTK #TNelectionwithabpnadu pic.twitter.com/uSojUXRfRb

— ABP Nadu (@abpnadu) April 9, 2026


இந்நிலையில் 'திமுக' என்று குறிப்பிட்டு 'சன் நியூஸ்' ஊடகம் வெளியிட்டிருந்த புகைப்படத்தை, 'அதிமுக' என்று எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.



இதே போன்று தவெகவினரும், ‘ABP நாடு’ ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 'தவெக' 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று வெளியிடப்பட்டுள்ளதாக கூறி போலியான புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.


‘NDTV’ கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாகப் பரவும் தவறான செய்தி!


தவெக 8, 10, 12, மற்றும் 14 சதவீதங்களில் வாக்கு பெற்றால் திமுக மற்றும் அதிமுகவுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படுத்தலாம் என்ற தலைப்பில் ‘NDTV’ நடத்திய விவாத நிகழ்ச்சியில், மொத்தம் 8 சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் 7 முடிவுகளில், திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எட்டாவது சாத்தியக்கூறின் அடிப்படையில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது.



மேலும் இந்த விவாதத்தில் தவெக குறித்தே பிரதானமாக விவாதிக்கப்பட்டது. தவெக கட்சி திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஓட்டை எவ்வாறு பிரிக்கும் என்றே ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியை தவறாகத் திரித்துப் பரப்புகின்றனர்.



‘IBC தமிழ்’  கருத்துக்கணிப்பு குறித்து பொய் செய்தி பரப்பும் நாம் தமிழர் கட்சியினர்!


‘IBC தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள சிறப்புக் கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சியே முன்னிலை எனக் கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.



IBC தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் “இதுபோன்ற எந்த கருத்துக்கணிப்பு முடிவையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளது


#ElectionSurvey #Election2026 #ibctamil pic.twitter.com/dcdq5rIlVJ

— IBC Tamil (@ibctamilmedia) April 15, 2026


தந்திடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!


தந்திடிவி வெளியிட்டுள்ள உண்மையான கருத்துக்கணிப்பில், மார்ச் 29 முதல் ஏப்ரல் 18 வரை எடுக்கப்பட்ட 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில், திமுக 41%-47% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.



இதில் மற்ற கட்சிகளான தவெக 28%-34%, அதிமுக 18%-24%, நாதக 1%-6% வாக்குகள் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



தந்திடிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கொளத்தூர் தொகுதியில் தவெக முன்னிலை எனக் கூறி போலியான செய்தியை பரப்பி வருகின்றனர்.


“Frontline” அட்டைப்படத்தில் ‘விஜய் அலை’ குறித்த செய்தி எனப் பரவும் போலி கார்டு!


இந்த மாதத்திற்கான “Frontline” ஆங்கில மாத இதழுக்கான அட்டைப்படத்தில் “விஜய் அலை” என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளதாப் பரவும் புகைப்படம் போலியானது. 



உண்மையான “Frontline” அட்டைப்படத்தில் “LESS THAN IDEAL“ என்று குறிப்பிட்டு வேறொரு செய்தியே வெளியிடப்பட்டுள்ளது. 



முடிவு: 


நம் தேடலில், மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் குறித்த செய்திகள் அனைத்தும் போலியானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க