யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது' என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தில், "பாகிஸ்தான் அரசின் ரகசிய மற்றும் அவசர வெளீயீடு" என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிகிறது.
Is Pakistani military hiding the radiation news?
#radiation #nuclear #DGMO #ceasefire #ceasefirevoilation #riyadh pic.twitter.com/aOEAXrMk7Q
Pakistanis having symptoms like vomiting, headache after the nuclear radiation and Radiation leak confirmed by pakistani Government Officially.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் ஆய்வு செய்ததில், "பாகிஸ்தான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (PNRA)" அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், பரவி வரும் புகைப்படத்தில் பாகிஸ்தான் அரசின் மின்னஞ்சல் முகவரி “@env.go.v.pk” என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு வரியிலும் கீழே குறிப்பிட்டிருப்பது போன்று பல எழுத்துப்பிழைகள் உள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.

இதன் மூலம் இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்திய தாக்குதலில் பாகிஸ்தானில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
