YouTurn

ஆட்டோ அல்லது டாக்ஸியில் பயணிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு காவல்துறை உதவி எண் அறிமுகம் செய்துள்ளதா?

ஆட்டோ அல்லது டாக்ஸியில் பயணிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு காவல்துறை உதவி எண் அறிமுகம் செய்துள்ளதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த காவல்துறை உதவி எண் மும்பை நகரத்தில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டது. ஆனால் 2017 ஆண்டிலே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பரவிய செய்தி

“பெண்கள் தனியாக ஆட்டோவிலோ அல்லது கார்லேயோ பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ’9969777888’ என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். காவல்துறை அந்த வாகனத்தை GPRS மூலம் கண்காணிக்கும்” - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு


image.png


Link 



Link 


விரிவான விளக்கம்

கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற தனிப்பிரிவை தொடங்கியது. இந்நிலையில், ’ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்களில் பெண்கள் தனியாக பயணிக்கும் போது, இந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்ட காவல்துறை உதவி எண்ணிற்கு தெரியப்படுத்துமாறும், இதனைக் கொண்டு அந்த வாகனத்தை போலீஸார் GPRS மூலம் கண்காணிப்பார்கள்’ என்றும் கூறி தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 




உண்மை என்ன?


இவ்வாறு ஒரு உதவி எண் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் இது குறித்த செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, காவல்துறை இது போன்றதொரு அறிவிப்பை வெளியிடவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 



மேலும் தேடிய போது, ’Press Information Bureau (PIB)’ 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ’ஆட்டோ அல்லது டாக்ஸியில் தனியாக பயணிக்கும் பெண்கள் அந்த வாகனத்தின் எண்ணை குறிப்பிட்ட எண்ணிற்கு தெரியப்படுத்துவது, அதன் மூலம் அந்த வாகனத்தை  GPRS மூலம் போலீஸ் கண்காணிக்கும் என்ற திட்டம் மும்பை நகரத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டம் 2017ஆம் ஆண்டிலே நிறுத்தப்பட்டுவிட்டது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதேபோல், பெங்களூரு மாநகர போலீஸ், ஹைதராபாத் மாநகர போலீஸ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த திட்டம் குறித்து பரப்பப்படும் தகவல் பொய்யானது என்றும் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 



மேற்கூறிய விவரங்களிலிருந்து, ’தனியாக பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பயணம் செய்யும் ஆட்டோ அல்லது டாக்ஸின் வாகன எண்ணை குறிப்பிட்ட காவல்துறை உதவி எண்ணிற்கு தெரிவிக்கும் திட்டம் மும்பை நகரத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது; ஆனால் 2017 ஆண்டிலே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது அது செயல்ப்பாட்டில் இல்லை’ என்பது தெரிய வருகிறது.


முடிவு:


ஆட்டோ அல்லது டாக்ஸில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு தற்போது காவல்துறை உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. இதுவொரு வதந்தி மட்டுமே, தமிழ்நாடு காவல்துறை இவ்வாறான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க