YouTurn

சூரிய பகவானிற்கு எரிச்சலடையும் என்பதால் சோலார் தகடுகள் உடைக்கப்பட்டதா ?

சூரிய பகவானிற்கு எரிச்சலடையும் என்பதால் சோலார் தகடுகள் உடைக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில் இருப்பவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி அசோக் சக்சேனா, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சூரிய பகவான் ஆத்திரமடைவார் என்று கூறியுள்ளார். அதனால், தற்போது பாஜக ஆதரவாளர்கள் சோலார் தகடுகளை அடித்து...

பரவிய செய்தி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாஜக தலைவர் மற்றும் எம்.பியான அசோக் சக்சேனா “ சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது சூரிய பகவானை பலவீனப்படுத்துவதும் மற்றும் எரிச்சலடையச் செய்யும் செயலாகும்” என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் சோலார் தகடுகளை சூறையாடியுள்ளனர்.

விரிவான விளக்கம்

வீடியோவில் இருப்பவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி அசோக் சக்சேனா, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சூரிய பகவான் ஆத்திரமடைவார் என்று கூறியுள்ளார். அதனால், தற்போது பாஜக ஆதரவாளர்கள் சோலார் தகடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர் என்று கூறி இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

சோலார் தகடுகளை உடைக்கும் வீடியோ தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் வைரலாகியுள்ளது. மார்ச் 28-ம் தேதி 2 லட்சம் பேரை உறுப்பினராக கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் குருப்-பில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு 18,000-க்கும் அதிகமாக ஷேர் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது சூரிய பகவானுக்கு எரிச்சலை உண்டாகும் என்று பாரதிய கட்சியின் எம்.பி அசோக் சக்சேனா கூறியதைப் பற்றித் தேடுகையில், பாஜக எம்.பிக்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயரே இல்லை. அதே போன்று மற்ற எம்.பிக்கள் இப்படி ஏதாவது கருத்து கூறினார்களா? என்று பார்த்தால் அதற்கான எந்தவொரு பதிவும் இல்லை. மேலும், புகைப்படத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாஜக தலைவர் எம்.பி ஸ்ரீ மகேந்திர நாத் பாண்டே ஆவார்.



எனினும், இந்த புரளியை பாஜக எம்.பி கூறியதாக பாகிஸ்தான் நியூஸ் சேனலான நியூஸ் ஒன்னில் செய்தி வாசிப்பின் போது வீடியோவுடன் கூறியதால், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இதை பதிவிட்டுள்ளனர்.

சரி, எதற்காக இவர்கள் சோலார் தகடுகளை அடித்து உடைக்கிறார்கள் என ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடுகையில், இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளதாக செய்தி கிடைத்தது.



2018 பிப்ரவரி 15-ம் தேதி மகாராஷ்டிராவில் அமைந்துள்ள 100 MW சோலார் பிளான்டில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தினால் கோபமடைந்தவர்கள் அங்குள்ள சோலார் தகடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.



Youtube link | archived link

இந்த சம்பவம் நடத்தது என்னவோ பிப்ரவரி மாதத்தில், ஆனால் மறுபுறம் குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஜிக்னேஷ் மற்றும் ஹர்திக் படேல் ஆகியோர் நடத்தப்பட்ட சூறையாடல் என்று மோடி ஆதரவாளர்கள் வேறொரு கதையை கட்டி விட்டனர்.

சோலார் தகடுகள் உடைக்கப்பட்டது உண்மையெனினும், அந்த வீடியோவுடன் தவறான செய்திகளை இணைத்து சமூக வலைதளங்களில் புரளிகளை பரப்பி வருகின்றனர்.

Update : 



Twitter link | archived link

கடந்த 2018 பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச பாஜக தலைவர் மற்றும் எம்பியான அசோக் சக்சேனா சோலார் தகடுகளால் சூரிய பகவான் எரிச்சல் அடைவதாக கூறியதால் தொண்டர்கள் சோலார் தகடுகளை அடித்து நொறுக்கியதாக தவறாக பரப்பப்பட்ட வீடியோ 2020 பிப்ரவரி மாதம் மீண்டும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதாரமில்லாத, தவறான செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

சுருக்கமாக

பாஜக எம்.பிக்கள் பட்டியலில் அசோக் சக்சேனா என்ற பெயரில் யாருமில்லை, சூரிய பகவான் பற்றி எந்தவொரு பாஜக எம்பி-யும் கருத்துக் கூறவில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க