YouTurn

தேர்தல் நேரத்தில் பரவிய போலி நியூஸ்கார்டுகள் ஆதாரத்துடன் இதோ!

தேர்தல் நேரத்தில் பரவிய போலி நியூஸ்கார்டுகள் ஆதாரத்துடன் இதோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகள் என்று குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் உள்ள சில வேட்பாளர்களை விமர்சித்து தந்தி டிவி, விகடன், சன் நியூஸ் போன்ற ஊடகங்களின் செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

பரவிய செய்தி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி.


X Link | Archive Link


பரவிய செய்தி 2:


மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமநத்தம் பகுதியில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் இருந்து ரூ. 40 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டதாக தகவல். 


Instagram Link

விரிவான விளக்கம்

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. 


இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை (ஏப்ரல் 23) தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது


இந்நிலையில் 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகள் என்று குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் உள்ள சில வேட்பாளர்களை விமர்சித்து தந்தி டிவி, விகடன், சன் நியூஸ் போன்ற ஊடகங்களின் செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 



#AVCartoon: உங்கள் குரல்..!

இந்த வார ஆனந்த விகடன், இப்போது கடைகளில்...
#TNElection2026 | #AnandaVikatan pic.twitter.com/NzU8vftUlU

— S D Raja - Returns (@raja_sd22122) April 21, 2026


வாழ்த்துக்கள் ஸ்டாலின்அவர்களே!!

@mkstalin pic.twitter.com/uMrrUfYEGk

— Dare Devil (@DareDevil_Offl) April 21, 2026


உண்மை என்ன? 


 திருப்பரங்குன்றத்தில் இருந்து ரூ. 40 லட்சம் கைப்பற்றப்பட்டது எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!


“மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமநத்தம் பகுதியில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான மனமகிழ் மன்றத்தில் இருந்து ரூ. 40 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டதாக தகவல்” எனக் கூறி பரவும் நியூஸ்கார்டு போலியானது. “இது குறித்து எந்த செய்தியும் நாங்கள் வெளிடவில்லை” என ‘தந்தி டிவி’ டிஜிட்டல் ஊடகப்பிரிவினர் நமக்கு உறுதி செய்துள்ளனர்.



திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!


“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி” எனப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.



இது குறித்து ‘சன் நியூஸ்’ டிஜிட்டல் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு பேசியதில், இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, பரவி வரும் கார்டு போலியானது என உறுதி செய்துள்ளனர்.


இந்திய முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு அறிவிப்பு எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!


தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து இஸ்லாமிய வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்தால், திருப்பங்குன்றம் தர்ஹா பாரம்பரியம் காக்கவும், ஆடு மாடு பலியிட்டு நேர்ச்சைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. இது குறித்து ‘தந்தி டிவி’ டிஜிட்டல் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு பேசியதில், “இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, பரவி வரும் நியூஸ்கார்டு போலியானது” என உறுதி செய்துள்ளனர்.



'ஆனந்த விகடன்' இதழின் அட்டைப்படத்தில் விஜய்' எனப் பரவும் போலி புகைப்படம்!


இந்த வார ஆனந்த விகடனில், ‘உங்களின் ஒருவன்’ என்று குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் புகைப்படத்துடன் அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானது. 



உண்மையான அட்டைப்படத்தில், “உங்கள் குரல்” என்று குறிப்பிட்டு வாக்கு செலுத்தியதைக் குறிக்கும் வகையில் மையிடப்பட்ட விரலின் புகைப்படத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளது. 



எதிர்கட்சியாக செயல்படுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!


"திமுக ஆட்சியை அமைக்காவிட்டாலும் எதிர்கட்சியாக செயல்படுவோம் என வில்லிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது.


#BREAKING | "மீண்டும் திமுக ஆட்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews pic.twitter.com/rCSXrre2aI

— Sun News (@sunnewstamil) April 21, 2026


ஏப்ரல் 21, 2026 அன்று 'சன் நியூஸ்' ஊடகம் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில், "தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததில்லை என்பதை உடைத்து இம்முறை ஆட்சியமைப்பேன் என வில்லிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை” என்று குறிப்பிட்டே செய்தி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.



முடிவு: 


நம் தேடலில், 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகள் என்று குறிப்பிட்டு பரவும் மேலே உள்ள செய்திகள் அனைத்தும் போலியானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க