யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“விசாரணை கைதிகள் விசாரணையின் போது, பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
"அரசியல் செய்யாதீர்"; விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக வேலை செய்த அஜித் குமார் (வயது 27), நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் நடத்திய தாக்கியதில் தான் உயிரிழந்தாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது. இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வெட்க கேடானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
இவ்வளவு மலிவா எழுதி கொடுத்தது எவன்டா?
#SayYesToWomenSafety&AIADMK (@IndiraniSudala1) June 30, 2025
எறும்பு கடிச்சு இறந்தான் என போன தடவை சொன்ன மாதிரி
இப்போ பயத்தில் இறந்து போயிருக்காருன்னு பொய் சொல்லுறாரு பாருங்க 🤦🏼 இப்படி ஒரு தத்தி முதல்வர் 🤦🏼😡 pic.twitter.com/2AC3aXPpLf
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து நியூஸ்7 தமிழ் ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். ஆனால் “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் “பரவி வரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு நியூஸ்7 தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் ஜூன் 29 அன்று பதிவு செய்துள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.
#Fake | #FakeNews | #FactCheck pic.twitter.com/8zAmM0FoWh
இந்நிலையில் போலியான நியூஸ் கார்டை பலரும் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், “விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.