YouTurn

'உச்சநீதிமன்றத்தில் பதவிபிரமாணத்தின் போது தமிழில் ஏற்புரை தந்த நீதிபதி மகாதேவன்' எனப் பரவும் தவறான வீடியோ!

'உச்சநீதிமன்றத்தில் பதவிபிரமாணத்தின் போது தமிழில் ஏற்புரை தந்த நீதிபதி மகாதேவன்' எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பரவிய செய்தி

உச்ச நீதிமன்றத்தில்! பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த இரண்டு பதவிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என். கோடீஸ்வர் சிங் ஆகியோரின் பெயரை 'நீதிபதிகள் தேர்வுகுழு' எனப்படும் கொலீஜியம் (Collegium) பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், இருவரும் புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தனது பதவியேற்பின்போது தமிழில் ஏற்புரை தந்த நீதிபதி மகாதேவன் என்றுகூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் அவர் தமிழ் புலவர்கள் பலரின் பாடல்களை குறிப்பிட்டு பேசுவதைக் காணமுடிகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக, பதவிப்பிரமாணம் செய்துகொண்ட வீடியோவை ஆய்வுசெய்து பார்த்தோம். 

"Sun News" ஊடகம் தனது யூடியூப் பக்கத்தில், "BREAKING: உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு | Justice R. Mahadevan in Supreme Court" என்ற தலைப்பில் இது குறித்த வீடியோவை கடந்த 17ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆங்கிலத்திலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார். 



மேலும் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள், நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட வீடியோவின் காட்சிகளோடு வேறுபட்டு இருந்தன. எனவே பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்தோம். 

"News7 Tamil PRIME"  யூடியூப் பக்கத்தில் "புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் நீதிபதி மகாதேவனுக்கு பிரிவு உபச்சார விழா" என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி கடந்த 16ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் சரியாக 9:00 வது நிமிடத்தில் பரவி வரும் வீடியோ கச்சிதமாகப் பொருந்தியது. 


இதன்மூலம், நீதிபதி மகாதேவனுக்கு சென்னையில் பிரிவு உபச்சார விழா நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவை, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

மேலும் சென்னையில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவின் போதே நீதிபதி ஆர். ஆர்.மகாதேவன் தமிழில் பேசியுள்ளார். புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவிபிரமாணம் செய்து கொண்ட போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் அவர் ஆங்கிலத்திலேயே பேசுகிறார் என்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

முடிவு:

நம் தேடலில், உச்சநீதிமன்றத்தில் பதவிப் பிரமாணத்தின்போது தமிழில் ஏற்புரை தந்த நீதிபதி மகாதேவன் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க