YouTurn

போதை மனிதனின் அடிப்படை உரிமையென இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாகப் பரப்பப்படும் பொய் செய்தி!

போதை மனிதனின் அடிப்படை உரிமையென இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாகப் பரப்பப்படும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

"போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று"! - வெற்றிமாறன்


X link

விரிவான விளக்கம்

இயக்குநர் வெற்றிமாறன் போதை என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று எனக் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?

இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாகப் பரவும் படத்தில் ‘Tamil The Hindu’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. 

இதனைக் கொண்டு இந்து தமிழ் திசையின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். கடந்த பிப்ரவரி 26ம் தேதி இறைச்சி... இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று! - வெற்றிமாறன்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. 



உணவக திறப்பு விழாவில் பேசிய வெற்றிமாறன், மனிதனின் வளர்ச்சியில் இன்றியமையாதது இறைச்சி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது’ எனக் கூறியதாக அச்செய்தியில் உள்ளது. 

மேற்கொண்டு அந்நிகழ்ச்சி குறித்துத் தேடியதில், ‘உப்புக்கண்டம் மெஸ்’ என்னும் கடை திறப்பு விழாவில் வெற்றிமாறன் பேசிய வீடியோ ‘Bingoo Box’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் இறைச்சி குறித்து அவர் பேசியுள்ளதைக் காண முடிகிறது. 



அந்நிகழ்ச்சியில் எந்த ஒரு இடத்திலும் போதை மனிதனின் அடிப்படை உரிமை என அவர் பேசவில்லை. இந்து தமிழில் வெளியான செய்தியில் உள்ள 'இறைச்சி' என்பதை 'போதை' என எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். 



முடிவு : 

போதை என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் இறைச்சி மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இன்றைக்கு மாறிவிட்டது எனப் பேசியதை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க