யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கன்னியாகுமரியின் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோபி என்பவர் பாஜக கட்சிக்கு ஆதரவாக கருத்துகளையும், ஆதரவான போக்கையும் கடைபிடித்து வந்துள்ளார். இவர் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பூந்தோப்பு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான லுபஸ் பெலுடின் என்பவரது நட்பு...
பரவிய செய்தி
போலி ஃபேஸ்புக் கணக்கின் மூலம் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் சவூதியில் இருந்து தமிழகம் வந்த சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவான விளக்கம்
கன்னியாகுமரியின் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோபி என்பவர் பாஜக கட்சிக்கு ஆதரவாக கருத்துகளையும், ஆதரவான போக்கையும் கடைபிடித்து வந்துள்ளார். இவர் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பூந்தோப்பு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான லுபஸ் பெலுடின் என்பவரது நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளார். லுபஸ் பெலுடின் ஃபேஸ்புக்கில் பாஜக ஆட்சியின் திட்டம், செயல்பாடு குறித்து கண்டித்தும், விமர்சித்தும் வந்துள்ளார். இதனால், கோபி பதிவிடும் பதிவுகளில் லுபஸ் பெலுடின் விமர்சனம் செய்வதும், லுபஸ் பெலுடின் பதிவில் கோபி விமர்சனம் செய்வதும் தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, கிறிஸ்துராஜ் என்ற போலியான ஃபேஸ்புக் ஐ.டி மூலம் லுபஸ் பெலுடின் பற்றி தவறான பதிவுகளை அதிகம் பதிவிட்டுள்ளார் கோபி. ஒரு கட்டத்தில் அந்த ஐ.டி மூலம் லுபஸ் பெலுடின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் , அவர் இறந்து விட்டதாக கூறியும் பதிவிடப்பட்டுள்ளது. இதை பற்றி நண்பர்கள் கூறும் பொழுது தான் லுபஸ் பெலுடின்க்கு அதுபற்றி தெரியவந்தது.
ஜூன் 1-ம் தேதி லுபஸ் பெலுடின் கன்னியாகுமரி சைபர் க்ரைம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரை பெற்ற க்ரைம் போலீசாரின் விசாரணையில், போலியான ஐடி மூலம் பதிவுகளை பதிவிட்டது பாஜக ஆதரவாளர் கோபி என அறிந்து அந்த ஐடி பயன்படுத்தப்படும் போன் மூலம் செல்லும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் கண்காணிக்கப்பட்டன.
போலீசாரின் கண்காணிப்பில் இருந்த கோபி சவூதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சவூதியில் இருந்து தமிழகம் வந்த சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு செல்வதற்கு முன்பே திருவட்டார் போலீசார் கோபியை கைது செய்து உள்ளனர்.

சுருக்கமாக
பாஜக கட்சி பற்றி விமர்சனம் செய்து வந்த லுபஸ் பெலுடின் என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இறந்து விட்டதாகவும், அவரை ஆபாசமாக காண்பித்து தவறாக கருத்து பதிவிட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த கோபி என்பவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.