YouTurn

தொகுப்பாளர் அப்துல் ஹமீது இறந்ததாகப் பரவும் போலிச் செய்தி!

தொகுப்பாளர் அப்துல் ஹமீது இறந்ததாகப் பரவும் போலிச் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வெண்கலக்  குரலுக்குச் சொந்தக்காரர். ஐயா உங்கள் மறைவு தமிழ்ப் பேருலகத்திற்கே   பேரழப்பு


X LINK

விரிவான விளக்கம்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர். இவர் காலமானார் என சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவுகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்தி குறித்து தேடிப் பார்த்ததில் ’நம் தமிழ்’ என்ற வானொலியின் நிர்வாக இயக்குனர் ஷர்தார் ஜமீல் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஹமீது குறித்து பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை உண்மை என நம்பி ஷர்தார் ஜமீல் அவரை தொலைப்பேசியில் அழைத்து பேசி உள்ளார். அவர் தான் பூரண நலமுடன் இருப்பதாக தெரிவித்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.




இதுகுறித்து ஹமீது, தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. நண்பர்களும் ரசிகர்களும் தொலைபேசியில் அழைத்த வண்ணமே உள்ளனர். நான் நலமாகவே உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.        

மேலும் "இது எனக்கு மூன்றாவது அனுபவம், முதல் முறை 1983ஆம் ஆண்டு என்னையும் என் மனைவியையும் எரித்துவிட்டதாகவும், இரண்டாவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இறந்து விட்டதாகவும் செய்திகள் பரவியது. தற்போது இது மூன்றாவது முறை" என அந்த காணொளிப்பதிவின் இறுதியில் தெரிவித்து இருந்தார். "ஒரு செய்தியை தீர விசாரித்து உறுதிப்படுத்தி வெளியிடும் பண்பை ஊடகங்கள் இழந்துவிட்டது" என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்யமுடிகிறது. 

முடிவு:

பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக பரவிய செய்தி தவறானது. அவர் நலமுடன் உள்ளார்.

- இரா.பானு பிரியா
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க