யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியதாகக் கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. இதே போன்று "திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் நிற்பது போன்று பரவும் நியூஸ் கார்டும் போலியானதே.
பரவிய செய்தி
"திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களுக்கு வெளியிட்டதாக தகவல்!
விரிவான விளக்கம்
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியதாகவும், இதே போன்று "திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று பிரதமர் நரேந்திரமோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் நிற்பது போன்றும் இரண்டு நியூஸ்கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
பரவி வரும் இரண்டு நியூஸ்கார்டுகள் குறித்து, "சன் நியூஸ்" ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில் இது குறித்து எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய முடிந்தது. மேலும் இரண்டு நியூஸ் கார்டுகளிலும் ஜெமினி லோகோ இருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.

எனவே இது தொடர்பாக 'சன் நியூஸ்' டிஜிட்டல் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு யூடர்ன் தரப்பில் இருந்து பேசினோம். பேசியதில் அவர்கள் "பரவி வரும் இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை, 'சன் நியூஸ்' ஊடகம் இது குறித்து எந்த நியூஸ்கார்டும் வெளியிடவில்லை" என்று நமக்கு உறுதிபடுத்தினர்.

மேலும் படிக்க: தேர்தல் நேரத்தில் பரவிய போலியான நியூஸ் கார்ட்டுகள்!
இதற்கு முன்பும் இதே போன்று பல போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அவை குறித்தும் நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சபாநாயகர் அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பரவும் தவறான செய்தி!
முடிவு:
நம் தேடலில், "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியதாகக் கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. இதே போன்று "திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று பிரதமர் நரேந்திரமோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் நிற்பது போன்று பரவும் நியூஸ் கார்டும் போலியானதே.