யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கல்வியால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லீம் மற்றும் துரதிஷ்டவசமாக பிறப்பால் ஒரு இந்து” என்று நேரு கூறியதாகக் கூறி செய்திகள் கடந்த 2015 ஆம் ஆண்டிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
பரவிய செய்தி
நான் கல்வியால் ஒரு ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம் மற்றும் துரதிஷ்டவசமாக நான் ஒரு இந்து - திரு நேரு.
பண்டித ஜவஹர்லால் நேரு பெருமிதத்துடன் கூறுவார் - முஸ்லீம் உணவு -இந்துக்களின் சமையலறையில் தயாரிக்கப்பட்டது, - பிரிட்டிஷாரின் சாப்பாட்டு மேசையில் உள்ளது, இந்த மூன்று விஷயங்களும் ஒன்று சேரும் போது நான் போதும் என்று உணர்கிறேன்.
விரிவான விளக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு, "கல்வியால் நான் ஒரு ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிம் மற்றும் துரதிஷ்டவசமாக பிறப்பால் நான் ஒரு இந்து" என்று கூறியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் இதே புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதையும் காணமுடிந்தது.
Is this for true? 🙄 pic.twitter.com/ohHybu6WZx
— ꪻꫝꫀ ꫀᥴꪶꫀᥴꪻ꠸ᥴ (@Aamvii) July 19, 2021
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், "கல்வியால் நான் ஒரு ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிம் மற்றும் துரதிஷ்டவசமாக நான் பிறப்பால் ஒரு இந்து" என்று நேரு கூறியதாகக் கூறி பாஜகவின் தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டே பதிவு செய்திருந்ததைக் காணமுடிந்தது.

இதே போன்று கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட ‘Deccan Chronicle’ செய்தித்தாளின் ஹைதராபாத் பதிப்பிலும் (பக்க எண் 12-இல்) நேரு கூறியதாகக் கூறி இதே வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
-@JhaSanjay @rssurjewala
— Rajdeep Arora 🇮🇳 (@AroraRajdeep) November 27, 2018
Confession of " Nehru "
● By Education I am an Englishman
● By Views an Internationalist
👉 By Culture a MUSLIM
👉 And a Hindu Only by Accident by Birth... #JawaharLal_Nehru @_BharatGajjar @nsbchd @Aartiii_ pic.twitter.com/Me8BaYodwN
ஆனால் அப்போதே காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கௌரவ் பாந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோர் ‘Deccan Chronicle’ நேரு குறித்து வெளியிட்ட இந்த வாசகம் நேருவால் கூறப்பட்டதல்ல, அது 1950ஆம் ஆண்டு இந்து மகாசபாவின் தலைவரான என்.பி. காரேவால் கூறப்பட்டது என்று குறிப்பிட்டு தங்களது எக்ஸ் பக்கங்களில் பதிவு செய்திருந்தனர்.
Hi @DeccanChronicle, this quote in your Hyd edition 19th Nov 2018 (Pg 12) is wrongly attributed to Nehru.
— Gaurav Pandhi (@GauravPandhi) November 24, 2018
It was rather said by NB Khare, President of Hindu Mahasabha, in 1950.
So, you care to explain & also issue an APOLOGY? You Can Not Get Away With Spreading False Info!
.. pic.twitter.com/EZrmnhBvCJ
எனவே இதுகுறித்த ஆய்வை தொடங்கினோம். வரலாற்றாசிரியருமான பி.ஆர்.நந்தாவின் “நேருஸ்: மோதிலால் மற்றும் ஜவஹர்லால்” (The Nehrus: Motilal and Jawaharlal) என்ற புத்தகத்தில் இதுகுறித்த குறிப்பைக் கண்டோம். அதில் நந்தாவின் கூற்றுப்படி, நேருவை 'கல்வியால் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லிம் மற்றும் பிறப்பால் இந்து' என்று வர்ணித்தவர் இந்து மகாசபையின் தலைவரான என்.பி. காரே என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது “நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்திலும் இந்து மகாசபா தலைவர் என்பி காரேவை மேற்கோள் காட்டி, கல்வியால் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லிம் மற்றும் பிறப்பால் இந்து' என்று வர்ணித்தவர் என்.பி. காரே என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1959ஆம் ஆண்டு ரஃபிக் ஜகாரியா நேரு பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து புத்தகமாகமாக எழுதியிருந்தார். அந்த நூலின் பக்க எண் 215-ல் இதே வாசகத்தைக் காணமுடிந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான அரசியல் பிரமுகர்கள் நேரு குறித்து பேசியுள்ள அனைத்தும் இந்தப் படைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் கட்டுரை எழுதி பங்களித்தவர்களில் ஒருவராக என்.பி. காரே இருந்துள்ளார் என்பதை அறியமுடிந்தது.

மேலும் பண்டித ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில் இதுகுறித்து எதுவும் கூறியுள்ளாரா என்பது குறித்தும் தேடிப் பார்த்தோம். "கல்வியால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லிம் மற்றும் பிறப்பால் ஒரு இந்து" என்று எந்த இடத்திலும் நேரு தன்னை இவ்வாறு குறிப்பிடவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மொத்தத்தில், இவை நேருவின் வார்த்தைகள் அல்ல, 1950ஆம் ஆண்டு இந்து மகாசபையின் தலைவர் என்.பி.காரே நேரு குறித்து சொன்ன வார்த்தைகளே இவை என்பதை அறியமுடிகிறது. இந்நிலையில் பாஜகவினர் உட்பட பலரும் “கல்வியால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் முஸ்லிம் மற்றும் துரதிஷ்டவசமாக பிறப்பால் ஒரு இந்து” என்று நேரு கூறியதாகக் கூறி தவறான செய்திகளை கடந்த 2015 ஆம் ஆண்டிருந்தே சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பும் நேரு குறித்த பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. அப்போதே அதுகுறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் தொகுப்பாக கட்டுரை வெளியிட்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்துப் பரப்பப்பட்ட பொய்களின் தொகுப்பு !
முடிவு:
நம் தேடலில், “கல்வியால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிம் மற்றும் துரதிஷ்டவசமாக பிறப்பால் நான் ஒரு இந்து” என்று ஜவஹர்லால் நேரு கூறியதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
