YouTurn

மோடிக்கு எதிராக களமிறங்கிய ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு.

மோடிக்கு எதிராக களமிறங்கிய ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய எல்லை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவை வழங்குவதாக மேலதிகாரிகள் மீது குற்றம்சாற்றி பேசிய வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதையடுத்து, ராணுவ வீரர் தேஜ் பகதூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறி அவரை...

பரவிய செய்தி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்த முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

விரிவான விளக்கம்

இந்திய எல்லை ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவை வழங்குவதாக மேலதிகாரிகள் மீது குற்றம்சாற்றி பேசிய வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இதையடுத்து, ராணுவ வீரர் தேஜ் பகதூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறி அவரை ராணுவத்தில் இருந்து நீக்கினர்.

இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தேஜ் பகதூர் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். எனினும், எந்த கட்சியின் சார்பிலும் நிற்காமல் சுயேச்சையாக நிற்க போவதாக கூறினார்.



ஆனால், அம்மாநில கட்சிகளான சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி வேட்பாளராக தேஜ் பகதூர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் வேட்புமனு நிராகரிப்பட்டது சமூக வலை தளத்தில் அதிகம் பரவி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் வேட்புமனு நிராகரி த்தற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.



அரசு பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், பணி நீக்கம் தொடர்பாக சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று கூறுகின்றனர். தேஜ் பகதூர் 2017  ஏப்ரல் 19-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செய்தி சமூக வலை தளத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளது. வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து தேஜ் பகதூரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.

சுருக்கமாக

பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்து உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.