YouTurn

EWS இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியுமா ?

EWS இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஓபிசி மாணவன் கூட பின்தங்கிய வகுப்பில் வரும் போது EWS போறான். இப்போ ஓபிசி மாணவனுக்கு இரண்டு இடத்தில் வாய்ப்பு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வரையறை இருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு கீழே இருக்க வேண்டும், அவர்கள் வீட்டின் பரப்பளவு இந்த அளவிற்கு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அவன் EWS-ன் 10%-க்கு போறான், அதே மாணவன் ஓபிசி-க்கும் தகுதி ஆகிறான் - அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.

[video width="864" height="496" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2020/08/WhatsApp-Video-2020-08-09-at-12.06.45-AM.mp4"][/video]

விரிவான விளக்கம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.அண்ணாமலை அவர்கள் நேற்று நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலின் வியூகம் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியின் போது 58.30-வது நிமிடத்தில் EWS-க்கு அளிக்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியும் என்கிற தகவலைத் தெரிவித்து இருந்தார்.



Facebook link | archive link 

கடந்த வருடத்தில் இருந்து EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை பலரும் அறிந்தே. EWS தொடங்கியது முதல் தற்போது வரை பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை EWS பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவினரும் போட்டியிட முடியும் என்கிற தவறான தகவலை தெரிவித்து இருக்கிறார்.



EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இடஒதுக்கீடு ஆனது இடஒதுக்கீடு முறைக்குள் வராத பொதுப் பிரிவினர் எனும் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வராத EWS-ஐ சேர்ந்த நபர் இந்திய அரசின் வேலைகளில் 10% இடஒதுக்கீடு பெறுவார்கள். அவர்களுக்கான வருமானம், சொத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற வரையறையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டிற்குள் வராத பொதுப் பிரிவினர் என அழைக்கப்படும் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர் ஒருவர் போட்டியிட முடியும் என்பது முற்றிலும் தவறான தகவல். ஒரு ஓபிசி மாணவன் ஓபிசி பிரிவிலும், பொதுப் பிரிவிலும் (Open Category) மட்டுமே போட்டியிட முடியும், EWS பிரிவில் போட்டியிட முடியாது.

இந்நிலையில், பேட்டியின் போது தாம் தெரிவித்த தவறான தகவலை திருத்திக் கொள்வதாக திரு.அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.



Twitter link | archive link 

மேலும் படிக்க : சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் ஓபிசி-ஐ விட EWS-க்கு குறைவான கட் ஆப் !

சிவில் சர்வீஸ் தேர்வில் EWS-க்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஓபிசி பிரிவுக்கு வழங்கப்பட்டதை விட குறைவாக இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. EWS அனைத்து பிரிவினருக்குமானது என்கிற தவறான தகவலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். இதுதொடர்பாக, புரிதல் மக்களிடையே உண்டாக வேண்டும்.

Link : 

https://dopt.gov.in/sites/default/files/ewsf28fT.PDF
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க