யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்று அரசாங்கம் அறிவிப்பு . இதெல்லாம் தேர்தல் விதிமீறல் இல்லை போல.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அத்தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது தேர்தல் விதிமீறல் இல்லையா என அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளதா என இணையத்தில் தேடினோம். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மற்றும் ஈரோடு டிவிட்டர் பக்கங்களில் “ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு 7.59 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
https://twitter.com/DMK_Chennai/status/1627565594995458048
Archive link
https://twitter.com/DMKErode/status/1627239079887933440
Archive link
இது தொடர்பாக ஈரோடு ஆவின் மேலாளர் மோகன் என்பவரைத் யூடர்னிலிருந்து தொடர்பு கொண்டு ‘சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதா?’ எனக் கேட்டோம்.
அதற்கு அவர் கூறுகையில், “அரசு விலை குறைத்த போது நாங்கள் குறைத்தோம். அதன் பிறகு எதுவும் குறைக்கவில்லை. அப்படி தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. அரசின் விதிமுறைகளின் படியே நாம் செயல்படுகிறோம். ஈரோடு மாவட்டத்திற்கென விலை எதுவும் தனியாகக் குறைக்கப்படவும் இல்லை. அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை” எனக் கூறினார்.
மேலாளர் கூறியதில் இருந்து, ஈரோடு மாவட்டத்திற்கென தனியாக ஆவின் பால் விலை எதுவும் குறைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக பயன்படுத்தியுள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் தற்போது விலை குறைக்கப்பட்டது போலத் தவறாகப் பொருள் கொள்ளும்படி திமுகவின் அந்த டிவிட்டர் பதிவு அமைந்துள்ளது.
ஆவின் விலை குறைப்பு :
திமுக தனது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் 2021ம் ஆண்டு, மே மாதம் 16ம் தேதி முதல் ஆவின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
மேலும் படிக்க : ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்துமஸிற்கு மட்டும் வாழ்த்து கூறுவதாக வதந்தி !
ஆவின் தொடர்பாகப் பரவிய பல பொய் செய்திகளின் உண்மைத் தன்மையை யூடர்ன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு
முடிவு :
நம் தேடலில், ஈரோடு மாவட்டத்திற்கென தனியாக ஆவின் பால் விலை குறைக்கப்படவில்லை என அதன் மேலாளர் மோகன் கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு, ஆவின் பால் விலை குறைப்பு தொடர்பாக திமுகவின் டிவிட்டர் பதிவு தவறாகப் பொருள் கொள்ளும்படி உள்ளதை அறிய முடிகிறது.