யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி, அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன்" என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ உண்மையாதல்ல. பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன்

விரிவான விளக்கம்
திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி, அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் திருடன் ஒருவன் ஒரு கடையில் வந்து மிரட்டி பணம் கேட்கும் போது, சிறுமி லாலிபாப்பை நீட்டும் போது திருடன் மனம் திருந்தி பணத்தை வைத்து விட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Kamran Team Official என்ற யூடியூப் பக்கத்தில் 16 நவம்பர் 2025 அன்று, The robber's heart melted என்ற தலைப்பில் இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
அந்த வீடியோவின் discription-ஐ பார்த்த போது, அதில் இந்த காணொளி பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே என்றும், இதில் தோன்றும் நபர்கள் உண்மையில் நாடக கதாபாத்திரங்கள் (நடிகர்கள்) என்றும், மேலும் இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள ஆயுதங்கள் போலியானவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த யூடியூப் பக்கத்தை ஆய்வு செய்த போது, இது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த யூடியூப் பக்கம் என்றும், நவம்பர் 2, 2021 உருவாக்கப்பட்டது என்றும் இருந்தது.

மேலும் அந்த யூடியூப் பக்கத்தில், இதே போன்று பொழுதுப்போக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும், அரங்கேற்றப்பட்ட காணொளி எனவும் குறிப்பிட்டு பல்வேறு வீடியோக்களை பார்க்க முடிந்தது.
முடிவு:
எனவே நம் தேடலில், "திருட வந்த திருடனிடம் தன்னிடம் இதுதான் இருக்கிறது என்று லாலிபாப்பை நீட்டும் சிறுமி, அந்த அன்பிற்கு அடிபணிந்த திருடன்" என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ உண்மையாதல்ல. பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.