YouTurn

கேரளாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக " என்டே கூடு " திட்டம்.

கேரளாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக " என்டே கூடு " திட்டம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பல பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர். அப்பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்குகின்றனர். சில பெண்கள் மற்றும் குழந்தைகள் உடன் வரும் தாய்மார்கள் இக்கட்டான சூழ்நிலையில் பொது இடங்களில்...

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பல பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர். அப்பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்குகின்றனர்.

சில பெண்கள் மற்றும் குழந்தைகள் உடன் வரும் தாய்மார்கள் இக்கட்டான சூழ்நிலையில் பொது இடங்களில் இரவு நேரங்களில் இருக்கும் போது பாதுகாப்பற்றச் சூழலைச் சந்திக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்றச் சூழலை சந்திக்கும் பெண்களுக்கு புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

“ என்டே கூடு “

My shelter அல்லது என் தங்குமிடம் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களில் பெண்கள் இரவு நேரங்களில் தங்க இடவசதி ஏற்படுத்தி உள்ளனர். ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் விதத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் படுக்கைகள், கழிவறைகள், சமையலறை, இலவச உணவு, டிவி, ஏ.சி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பெண்கள் தங்கும் இப்பகுதிக்கு பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகவும், பாதுகாப்பாகவும் தங்கலாம்.



என்டே கூடு திட்டம் கேரள மாநிலத்தின் சமூகநீதி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரம் மற்றும் சமூகநீதி துறையின் அமைச்சர் கே.கே.ஷைலஜா நவம்பர் 8-ம் தேதி தாம்பனூர் பேருந்து நிலையத்தில் இதைத் தொடங்கி வைத்தார். பிற பகுதிகளிலும் செயல்படுத்த உள்ளனர்.



தாம்பனூர் பேருந்து நிலையத்தில் 8-வது மாடியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பும் இருக்கும் என கூறியுள்ளனர்.

என்டே கூடு திட்டம் பெண்களின் பாதுகாப்பிற்கானது என்பதால் நிச்சயம் பயனுள்ளத் திட்டமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என்பது இன்றைய இந்தியாவில் அவசியமான ஒன்றாகி விட்டது.

சுருக்கமாக

கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் இலவசமாக மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பாக பேருந்து நிலையத்தில் தங்க “ என்டே கூடு “ எனும் திட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.