யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் பிக்பாக்கெட் பற்றி கேள்விபட்டிருப்போம், ஆனால் பாக்கெட்டில் கை வைக்காமலேயே நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை திருடும் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் பற்றி அறிந்து இருக்கமாட்டீர்கள். அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் வைரலான வீடியோவை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். “...
பரவிய செய்தி
பாக்கெட் மற்றும் பர்ஸ்களில் வைத்திருக்கும் RFID பதிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நபரின் அருகில் வந்து அதை எடுக்காமலேயே அதில் இருக்கும் தகவல்களை ஸ்கேன் செய்வது போன்று திருடி மோசடி செய்து பொருட்களை வாங்க முடியும். இந்த எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் இனி கார்டுகளை பயன்படுத்துவதும் ஆபத்தாக மாறி விட்டது.
விரிவான விளக்கம்
பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடும் பிக்பாக்கெட் பற்றி கேள்விபட்டிருப்போம், ஆனால் பாக்கெட்டில் கை வைக்காமலேயே நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை திருடும் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் பற்றி அறிந்து இருக்கமாட்டீர்கள். அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் வைரலான வீடியோவை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.

“ ஷாப்பிங் மால் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு பின்னால் சென்ற நபர் கையில் ஸ்வைப்பிங் மிஷின் போன்ற ஒன்றை அவரின் பாக்கெட்டின் அருகில் வைத்து read செய்து கிரெடிட் கார்டு தகவல்களை எடுத்து விட்டதாக காண்பித்து இருப்பார் “ இதையே எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்கின்றனர். ஆனால், இது உண்மையா ? இவ்வாறு பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்விகள் அதிகம் உள்ளன.
இதேபோல் 2010 டிசம்பரில் WREG என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் இணையப் பக்கத்தில், எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் மோசடியால் Radio Frequency identification technology ( RFID ) chip பதியப்பட்ட “ contactless ” கார்டுகளான கிரெடிட், டெபிட், ATM போன்றவற்றை பயன்படுத்துவது ஆபத்தாக அமைந்து விட்டது. Account number, expiration date-களை கொண்ட RFID chip-யை point of sale RFID reader மூலம் கார்டை தொடாமலேயே எடுக்க முடியும். இதுவே RFID தொழில்நுட்பத்தில் உள்ள குறை என்ற நீண்ட கட்டுரையை வெளியிட்டனர்.

“ தென் ஆப்பிரிக்காவில் பாக்கெட்டில் இருக்கும் contactless card-ஐ Radio Waves மூலம் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் செய்ய முடியும் என எழுந்த அச்சத்தில் அவற்றை தடுக்க “ RFID Blocking “ பர்ஸ் மற்றும் வாலெட்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது “
“ san Francisco-வை மையமாகக் கொண்ட Technology Digital publication info world-ன் Roger Grimes, பாக்கெட்டில் கை வைக்காமல் எடுக்கும் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் நிஜ உலகில் நடக்கவில்லை. ஆகையால் அச்சம் கொள்ள தேவையில்லை. RFID Blocking பொருட்களை தயாரிப்பவர்கள் இதற்கு முந்தைய ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது என்பதற்கான ஆதாரத்தை அளிக்க முடியுமா ? ” என்று கூறியுள்ளார்.

இதுநாள்வரை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் என்று எந்தவொரு குற்றச் சம்பவமும் நிகழவில்லை, அதேவேளையில் அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதை செய்தவரை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம். அதேபோல், Contactless card-களை read செய்து அதில் உள்ள வங்கி கணக்கு எண், expiry date போன்றவற்றை எடுத்தாலும் card-க்கான PIN நம்பர், CVV number உள்ளிட்டவை இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்பதை அறியாமலா இருப்பர். எனினும், கார்டுகளை கூடுதல் பாதுகாப்பாக வைத்து இருப்பது RIFD சிக்னல்ஸ் ட்ரான்ஸ்மிட் செய்வதில் இருந்து பாதுகாக்கும்.
இந்த செய்திகள் போன்று, ஒருவர் point of sale device-ஐ வைத்திருப்பதாக ஓர் படம் இணையத்தில் வைரலாகியது. தொழில்நுட்ப வளர்ந்தாலும் இவ்வாறான மோசடிகள் நடக்க வாய்ப்பபு குறைவு என்பது நிதர்சனம்.

சுருக்கமாக
RFID பதிக்கப்பட்ட கார்டுகளை எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் முறையால் மோசடி செய்து திருடிவருவதாக வெளியாகிய வீடியோ பதிவால் தென் ஆப்ரிக்கா நாட்டில் அச்சம் எழுந்தது. இதனால், RFID-ஐ read செய்ய முடியாதவாறு RFID block செய்யப்பட்ட பர்ஸ்கள் தயாரிக்க முடிவெடுத்தனர். ஆனால், எலக்ட்ரானிக் பிக்பாக்கெட் நடந்ததாக எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை.